- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் அப்படிப்பட்ட தலைவன் கிடையாது, விஷாலை வம்பிக்கு இழுத்த முன்னாள் நடிகர் சங்க பொதுச்...

நான் அப்படிப்பட்ட தலைவன் கிடையாது, விஷாலை வம்பிக்கு இழுத்த முன்னாள் நடிகர் சங்க பொதுச் செயலாளர் சரத்குமார் – கேரளா விவகாரம் தமிழ் சினிமா துறையிலும் கொளுந்து விட்டு எரியுதே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் 1990களில் முன்னணி நடிகராக, பல வெற்றிப் படங்களில் நடித்தவர் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார். நாட்டாமை, சூரியவம்சம், சிம்ம ராசி, சமுத்திரம், சேரன் பாண்டியன் போன்ற இவரது படங்கள் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற படங்களாக இருந்தன.

ஒரு கட்டத்துக்கு பிறகு அப்பா, அண்ணன் போன்ற குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்த சரத்குமார், 1996ம் ஆண்டில் சமத்துவ மக்கள் கட்சி என்ற அரசியல் இயக்கத்தை துவங்கினார். அதன்பிறகு அரசியலில், சினிமாவில் இரட்டை குதிரை சவாரி செய்து வருகிறார். சமீபமாக, பாஜக உடன் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடர்கிறார்.

- Advertisement -

மதுரையில் பாஜக சார்பில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, ஹேமா கமிட்டி அறிக்கையில், பாலியல் துன்புறுத்தல் இருப்பதாக உறுதிப்படுத்தி உள்ளது. ஆனால் யாருடைய பெயரையும் அவதூறு பரப்பும் நோக்கில் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. கேரள நடிகர்கள் தவறு செய்தார்களா, இல்லையா என்று நிரூபிக்க வேண்டியது கடமை.

நிர்பயா கொலை வழக்கு, கொல்கத்தா சம்பவம் என பல இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன. பிறர் என்ன செய்தார்கள் என்று யோசிப்பதை விட நாம் மக்களை எப்படி சீர்ப்படுத்திக் கொள்ள வேண்டும், எப்படி வளர்க்க வேண்டும் என்பது பற்றிதான் நான் நினைப்பேன். கேரவனில் கேமரா பிரச்னை குறித்து என் மனைவி ராதிகா ஏன் அப்போது பேசவில்லை என்று இப்போது கேட்கிறார்கள்.

- Advertisement -

என் மனைவிக்கு அந்த விஷயத்தை கடந்துபோகும் சக்தி இருந்ததால், அவர் அதைப்பற்றி பேசாமல் தவிர்த்திருக்கலாம். நாம் பெண்களை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான தண்டனை இருக்கிறது என்று தெரிந்தால்தான் இதை திருத்த முடியும்.

பிக்பாஸ் நடிகை யாரும் என்னிடம் புகார் கொடுத்தது கிடையாது. மற்றவர்களை போல நான் சாதாரண தலைவன் கிடையாது. என்னிடம் புகார் கொடுத்தால் உடனடியாக நடவடிக்கை எடுப்பேன். அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீதே குற்றச்சாட்டு உள்ளது, என்று கூறியிருக்கிறார். இதில் நடிகர் சங்கத் தலைவராக நான் இருந்தால் எந்த குற்றச்சாட்டு வந்தாலும் உடனடியாக விசாரிக்கிற தலைவனாக இருப்பேன் என சரத்குமார், நடிகர் சங்க நிர்வாகிகள் நாசர், விஷாலை வம்பிழுத்தது ஏன் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்