- Advertisement -
Homeபொழுதுபோக்குகார் நெம்பர் பிளேட்டில் அரசியல் பேசிய தி கோட் படம், அப்போ 2026ல் தமிழ்நாட்டு முதல்வர்...

கார் நெம்பர் பிளேட்டில் அரசியல் பேசிய தி கோட் படம், அப்போ 2026ல் தமிழ்நாட்டு முதல்வர் விஜய்தானா? – வெங்கட்பிரபு வைத்த டிவிஸ்ட் செமயா இருக்குதே?

- Advertisement -

நடிகர் விஜய் நடிப்பில் இன்று வெளியான தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படம் குறித்த பரபரப்பு ரசிகர்கள் மத்தியில் இன்னும் குறையவில்லை. படத்தில் எதிர்பார்த்த அம்சங்கள் பெரிய அளவில் இல்லை என்று ஒரு தரப்பு கூறினாலும், படம் பெரிய அளவில் மாஸ் ஆக தான் உள்ளது என்று மற்றொரு தரப்பு கூறி வருவதால் படத்துக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்து வருகின்றன.

இந்த படத்தை பொருத்த வரை அரசியல் இல்லை என்று கூறப்பட்டாலும் இலைமறை காயாக சில இடங்களில் அரசியல் சார்ந்த வசனங்கள் இடம்பெறவே செய்கின்றன. அதே நேரத்தில் படத்தில் அந்த சூழலில் அந்த கேரக்டர் பேசும் சரியான வசனமாக இருந்தாலும், மறைமுகமாக அது அரசியல் வசனங்களாக தான் இருக்கின்றன.

குறிப்பாக கிளைமாக்ஸில், அண்ணனுக்கு வேற முக்கியமான பெரிய வேலை ஒண்ணு இருக்கு, அதை அவர் பார்த்துக்கட்டும், இதை நான் பார்த்துக்கிறேன் என்று சிவகார்த்திகேயன், விஜயை பற்றி பேசுவது போன்ற காட்சி, வசனம் வருகிறது. அதாவது விஜய் அரசியலுக்கு போகிறார், அவருக்கு அரசியலில் பெரிய வேலை இருக்கிறது.

அதனால் அவர் நடித்துவந்த சினிமா நடிப்பை அவரது இடத்தில் நான் பார்த்துக்கொள்கிறேன் என்பது போல அந்த காட்சியை வெங்கட்பிரபு உருவாக்கி அசத்தி இருக்கிறார். இப்படி ஒரு வசனத்தை சிவகார்த்திகேயனை பேச அனுமதித்த விஜய்க்கு ஒரு பெரிய சபாஷ் போடலாம். அதே நேரத்தில் தனது அடுத்த பட ஹீரோ சிவகார்த்திகேயனுக்கும் தனது படத்தில் ஒரு மாஸ் தந்திருக்கிறார் இயக்குனர் வெங்கட்பிரபு.

அதுமட்டுமின்றி விஜய் பயன்படுத்தும் காரில், நம்பர் பிளேட் டிஎன் 07 சிஎம் 2026 என உள்ளது. இதை சற்று கவனித்து பார்த்தால் 2026ம் ஆண்டில் சிஎம் ஆக வரப்போவது விஜய்தான் என்பதை சூசகமாக சொல்லும் விதமாக, இந்த கார் நம்பரை வைத்து வெங்கட்பிரபு விஜய்க்கு அரசியல் ஆதரவை தேடி தந்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

இதை பெரும்பாலான ரசிகர்கள் நுணுக்கமாக கவனித்து, தனது கார் நம்பர் மூலம் தனது சிஎம் கனவு குறித்து விஜய் தனது ரசிகர்களுக்கும், மக்களுக்கும் தெளிவுபடுத்தி இருக்கிறார். ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற தவெக பொதுச் செயலாளர் புஸ்லி ஆனந்திடம் இதுபற்றி கேட்ட போது, அதை நோக்கித் தானே எங்களது அரசியல் பயணம் உள்ளது என்று கூறியிருக்கிறார். அதுவும் வைரலாகி வருகிறது,

சற்று முன்