தமிழ் சினிமாவில் ஒவ்வொரு முன்னணி நடிகருக்கும் ஒரு இடம் உள்ளது. அடுத்தடுத்து வரும் நடிகா்கள், அவர்களுக்கான இடத்தை தான் பிடிக்கிறார்களே தவிர, முன்னால் உள்ள நடிகர்களின் இடத்தை அவர்கள் பிடிப்பது இல்லை என்பதுதான் உண்மை. எம்ஜிஆர் சிவாஜி போன்ற ரஜினி, கமல் முன்னணி நடிகர்களாக உயர்ந்தாலும் எம்ஜிஆர் சிவாஜியின் இடம் அவர்களுக்கானதாக மட்டும்தான் இருக்கிறது.
அதே போல் தமிழ் சினிமாவில் தனக்கான ஒரு இடத்தை ஏற்படுத்தி ரசிகர்களின் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்தவர் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த். அவர் நடிப்பிலும் மட்டுமின்றி பல விஷயங்களில் ஒரு சிறந்த மனிதராக இருந்தார். குறிப்பாக மனித நேயம், சம உரிமை, பிறருக்கு உதவுதல், நிர்வாகத் திறன், ஆளுமை என விஜயகாந்த் கேப்டனாக விளங்கினார்.
தேமுதிக என்ற அரசியல் கட்சி இயக்கத்தின் தலைவராகவும் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை, ஆதரவை பெற்ற அவர், ஜெயலலிதா அமைச்சரவையில் எதிர்கட்சி தலைவராகவும் அமர்ந்தார். அதிமுக, திமுக என்ற எதிர்கட்சிகளுக்கு நடுவில் திமுகவை 3ம் இடத்துக்கு தள்ளி அதிமுகவுக்கு எதிர் கட்சியாக சபையில் அமர்ந்தவர் விஜயகாந்த்.
தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக கேப்டன் இருந்த காலகட்டத்தில் நடிகர் சங்க கடனை அடைப்பதற்காக வெளிநாடுகளில் கலை இரவு நிகழ்ச்சிகளை நடத்தி, அதன்மூலம் வந்த வருவாயில் நடிகர் சங்கத்தின் மொத்த கடன்களையும் அடைத்தார். அப்படிப்பட்ட கேப்டன் மறைவுக்கு மரியாதை செய்யும் விதமாக தி கோட் படத்தில் அவர் வரும் காட்சி ஏஐ தொழில்நுட்பத்தில் இடம்பெற்றுள்ளது.
படத்தின் துவக்க காட்சியில், விஜய்தான் விஜயகாந்த் கெட்டப்பில் வருகிறார். உடல்மொழி விஜயாகவும், முகம் மட்டும் விஜயகாந்தாகவும் அந்த காட்சி ரசிகர்களை வெகுவாக கவரவில்லை. விஜயகாந்த் வரும் அந்த காட்சியில் பெரிய முக்கியத்துவமும் இருப்பதாக தெரியவில்லை. ஒரு நிமிடத்தில் விஜயகாந்த், விஜயாக மாறி விடுகிறார்.
இன்னும் சற்று அழுத்தமான காட்சியில், விஜயகாந்தை இன்னும் பெரிய லெவலில் காட்டியிருந்தால், ரசிகர்கள் இன்னும் சந்தோஷப்பட்டு இருப்பார்கள். அதே நேரத்தில் இந்த ஒரு நிமிடம் வந்த சுமாரான ஒரு காட்சிக்காக ரூ. 50 லட்சம் சம்பளமாக விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவிடம் வழங்கப்பட்டது. இந்த காட்சிக்கு இந்த சம்பளம் ரொம்பவும் ஓவர்தான் என்றும் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.





