- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்தப் பக்கம் நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2... அந்தப் பக்கம் திரிஷாவின் மாசாணி அம்மன்......

இந்தப் பக்கம் நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2… அந்தப் பக்கம் திரிஷாவின் மாசாணி அம்மன்… ஆனால் இயக்குனர்கள் வேறு வேறு… என்ன நடக்குது இங்கே…

- Advertisement -

நடிகரும் இயக்குனருமான ஆர்ஜே பாலாஜி மற்றும் சரவணன் ஆகியோர் இயக்கத்தில் 2020 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் மூக்குத்தி அம்மன். நயன்தாரா அம்மன் வேடத்தில் நடித்த இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்பட்டது.

 

ஒரு பக்கம் நகைச்சுவை, மறுபக்கம் சென்டிமென்ட் என கலந்து கட்டி எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்களிடம் ரீச் ஆனது. குறிப்பாக அம்மன் வேடத்தில் நயன்தாரா கச்சிதமாக பொருந்தி இருப்பதாகவும், அவரது நடிப்பு நன்றாக இருந்ததாகவும் பலர் கூறினர்.

 

அதேசமயம் முதல் பாதி நன்றாக உள்ளது என்றும் இரண்டாம் பாதியாக அந்த அளவு சரியில்லை எனவும் சில விமர்சனங்கள் எழுந்தன. நேரடியாக திரையரங்குகளில் வெளியாகாததாலும் திரைப்படம் அந்த அளவுக்கு பேசப்படவில்லை. டிவியில் ஒலிபரப்பப்பட்ட பிறகு தான் மூக்குத்தி அம்மன் கொண்டாடப்பட்டது.

 

இந்தப் படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படியான சூழலில், மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க ஆர்ஜே பாலாஜி திட்டமிட்டார். ஆனால் அதற்குள் அந்த திரைப்படம் தொடர்பான அறிவிப்பை வேல்ஸ் நிறுவனம் வெளியிட்டது. ஆனால் இந்த முறை படத்தின் இயக்குனர் குறித்த அறிவிப்பை கூறவில்லை.

 

இதனால் தயாரிப்பு நிறுவனத்திற்கும் இயக்குனருக்கும் இடையே சிறிய மனஸ்தாபம் ஏற்பட்டிருப்பது உறுதியானது. அதேசமயம் இந்த பக்கம் ஆர்ஜே பாலாஜி, த்ரிஷாவை வைத்து மாசாணி அம்மன் என்னும் திரைப்படத்தை இயக்க முடிவெடுத்துள்ளார். இதற்கான ப்ரீ ப்ரொடக்சன் பணிகளும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

 

இது ஒரு பக்கம் இருக்க, மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகளும் சூடு பிடித்துள்ளன. இதற்கான வேலைகளை தொடங்கி இருப்பது வேறு யாரும் அல்ல இயக்குனர் சுந்தர் சி தானாம். அவரைத்தான் வேல்ஸ் நிறுவனம் ஓகே செய்திருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் படத்திற்கான சூட்டிங் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

சற்று முன்