விஜய் டிவியில் கடந்த 7 ஆண்டுகளாக பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. செப்டம்பர் மாத இறுதியில் அல்லது அக்டோபர் மாத துவக்கத்தில் ஓரிரு வாரங்கள் முன்னதாக துவங்கப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சி, ஜனவரி மாதம் 2வது வாரம் வரை நீடிப்பது வழக்கம். இதில் 100 நாட்களை கடந்தும் நீடிக்கும் போட்டியாளர்களில் ஒருவர் வெற்றி பெறுவார்.
இந்த 7 ஆண்டுகளில் நடத்தப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரவ், முகின், அஸீம், ரித்விகா, ராஜூ, ஆரி, கடந்தாண்டு 7வது சீசனில் அர்ச்சனா என 7 பேர் டைட்டில் வின்னர்களாக வெற்றி பெற்றனர். இந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சி துவக்கத்திலேயே பெரிய மாறுதலை சந்தித்துள்ளது.
ஏனெனில் கடந்த 2017ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை கடந்த 7 ஆண்டுகளாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது நடிகர் கமல்ஹாசன். அவர் இந்த முறை நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி விட்டால், பிக்பாஸ் சீசன் 8 போட்டியை தொகுத்து வழங்குபவர் நடிகர் விஜய் சேதுபதி என்பது 100 சதவீதம் உறுதியாகி விட்டது. அவர்தான் இந்த 8வது சீசனை கமல் இடத்தில் இருந்து நடத்தப் போகிறார்.
வரும் அக்டோபர் மாதம் 6ம் தேதி இந்த நிகழ்ச்சி துவங்குகிறது. மாலை 6 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி பங்கேற்று போட்டியாளர்களை அறிமுகப்படுத்தி, பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்புகிறார். கடந்த 7வது சீசனில் பிக்பாஸ் வீட்டுக்குள் 2 வீடுகள் இருந்தன. இந்தமுறையும் அதே போல் இருக்குமா, அல்லது வழக்கமான ஒரு வீடுதானா என்பது பின்னர் தெரிய வரும்.
இந்த முறை பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்களாக நடிகர் ரஞ்சித், நடிகர் ரியாஸ்கான், நடிகர் பப்லு பிருத்விராஜ், பாரதி கண்ணம்மா நடிகர் அருண், டிடிஎப் வாசன், ஆர்ஜே ஆனந்தி, நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார் உள்ளிட்ட 18 பேர் போட்டியாளர்களாக செல்ல வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிக்பாஸ் போட்டியாளர்களாக டெரர் கேரக்டர்களான இவர்கள், வீட்டுக்குள் எப்படி அழிச்சாட்டியம் செய்யப் போகிறார்கள், இவர்களை எல்லாம் வைத்து 100 நாட்கள் விஜய் சேதுபதி எப்படி சமாளிக்கப் போகிறார் என்ற ஆர்வமும், கேள்வியும், எதிர்பார்ப்பும் விஜய் டிவி பிக்பாஸ் பார்வையாளர்கள் மத்தியில் இப்போதே அதிகரிக்க துவங்கி விட்டது.





