- Advertisement -
Homeபொழுதுபோக்குகடைசியில் அது உண்மையாகி விட்டதே? நான் எனது திருமண வாழ்வில், மனைவியை ஆர்த்தியை விட்டு நிரந்தரமாக...

கடைசியில் அது உண்மையாகி விட்டதே? நான் எனது திருமண வாழ்வில், மனைவியை ஆர்த்தியை விட்டு நிரந்தரமாக விலகுகிறேன் – அதிகாரபூர்வமாக அறிவித்த நடிகர் ஜெயம் ரவி

- Advertisement -

தமிழ் சினிமாவில் புகைந்து கொண்டே இருக்கும் சில விஷயங்கள் ஒரு கட்டத்தில் உண்மையாகி விடுகின்றன. வெறும் வதந்தி, பொய்யான தகவல் என்று கருதப்படும் பல விஷயங்கள், ஒரு காலக்கட்டத்தில் அது பொய்யல்ல, உண்மைதான் என்று உறுதியாகி விடுகிறது. பல நாட்களாக புகைந்து கொண்டு இருந்தது, இப்போது தீப்பற்றி எரிகிறது என்று உறுதிப்படுத்துவது போல ஒரு கட்டத்தில் அந்த உண்மை வெளிச்சத்துக்கு வந்து விடுகிறது.

இப்போது நடிகர் ஜெயம் ரவி, குடும்ப வாழ்க்கையிலும் அது நடந்திருக்கிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ஜெயம் ரவி. இவர் ஜெயம் என்ற படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்தார். குறிப்பாக தனி ஒருவன், சந்தோஷ் சுப்பிரமணியம், எனக்கு 20 உனக்கு 18, வனமகன், பேராண்மை, டிக் டிக் டிக் உள்ளிட்ட பல படங்களை சொல்ல முடியும்.

- Advertisement -

அதே நேரத்தில் இவர் நடித்த சில படங்கள், கடந்த சில ஆண்டுகளாக பலத்த தோல்வியை சந்தித்து வருகின்றன. குறிப்பாக இறைவன், அகிலன், சைரன் 108 போன்ற படங்கள் ஜெயம் ரவிக்கு வெற்றியை கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில மாதங்களாகவே நடிகர் ஜெயம் ரவி வீட்டில் குடும்பத்துடன் தங்காமல், தன்னுடைய பழைய வீட்டில், அலுவலகத்தில் மாதக் கணக்கில் தங்கி இருக்கிறார் என்றும், கோவாவுக்கு தனியாகச் சென்று ஒரு மாதமாக ஓய்வெடுத்து வருகிறார், தனிமையில் இருந்து வருகிறார் என்றும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டது. மேலும் துபாயில் அவர் செட்டிலாக த திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்பட்டது.

- Advertisement -

அது மட்டும் இன்றி நடிகர் ஜெயம் ரவிக்கும் அவரது மனைவி ஆர்த்திக்கும் இடையே கடுமையான கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பல மாதங்களாகவே பிரிந்து வாழ்கின்றனர். விரைவில் இவர்களும் விவாகரத்து என்ற முடிவுக்கு வரலாம் என்றும் தமிழ் சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்டது. இது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்த சூழலில் இப்போது நடிகர் ஜெயம் ரவி அதிகாரப்பூர்வமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நான் என் மனைவி ஆர்த்தியை பிரிகிறேன். என்னுடைய திருமண வாழ்க்கையில் இனிமேல் ஆர்த்தியுடன் எனது பயணம் இருக்காது. நான் ஆர்த்தியை விட்டு நிரந்தரமாக விலகுகிறேன் என்று அவர் தனது அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். இது ஜெயம் ரவி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமா வட்டாரத்தில் தொடர்ந்து இப்படி நட்சத்திர தம்பதிகள் பிரிவது ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தி உள்ளது

- Advertisement -

சற்று முன்