- Advertisement -
Homeபொழுதுபோக்குஎனக்கு ஜோடியாக நடிக்கப் போவது அந்த இசையமைப்பாளரா? - திடீரென படத்தில் இருந்து விலகிய நடிகை...

எனக்கு ஜோடியாக நடிக்கப் போவது அந்த இசையமைப்பாளரா? – திடீரென படத்தில் இருந்து விலகிய நடிகை கீர்த்தி சுரேஷ்!

- Advertisement -

மலையாளத்தில் இருந்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் கீர்த்தி சுரேஷ். தமிழில் விஜயுடன் பைரவா சர்கார் சிவகார்த்திகேயனுடன் ரெமோ ரஜினி முருகன் ரஜினியுடன் அண்ணாத்த உள்பட சாமி 2 சைரன் 108 நடிகையர் திலகம் தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட பல படங்களில் கீர்த்தி சுரேஷ் நடித்தார்.

கடந்த 2024ம் ஆண்டு இறுதியில் ஆண்டனி தட்டில் என்ற தனது நீண்ட கால நண்பரை கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்துக்கு பிறகும் அவர் தொடர்ந்து தமிழ் மலையாளம் தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் எல்லம்மா என்ற படத்தில் நடிக்க கமிட் ஆன அவர் திடீரென அந்த படத்தில் இருந்து விலகியதாக தெரிய வந்துள்ளது.

- Advertisement -

தெலுங்கு மொழியில் உருவாகும் எல்லம்மா என்ற படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் என்கிற தகவல் பல மாதங்களுக்கு முன்பே வெளியானது. இந்த படத்தை இயக்குனர் வேணு ஏல்தந்தி டைரக்‌ஷன் செய்கிறார். மேலும் இந்த படத்தில் நடிகர் நானி அல்லது நிதின் ஆகிய 2 பேரில் ஒருவர் கதாநாயகனாக நடிக்க உள்ளதாகவும் ஒரு தகவல் பரவியது.

ஆனால் இப்போது இந்த படத்தில் கதாநாயகனாக பிரபல பின்னணி இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் தான் அறிமுகமாகிறார். அவருக்கு இதுதான் முதல் படம். விஜய் ஆண்டனி ஜீவி பிரகாஷ் குமாரை தொடர்ந்து தேவி ஸ்ரீ பிரசாத்தும் இப்போது சினிமாவில் கதாநாயகனாக நடிக்க வந்து விட்டார்.

- Advertisement -

இதைத் தொடர்ந்து எல்லம்மா படத்தில் இருந்து கதாநாயகியாக நடிக்க கமிட் ஆகியிருந்த நடிகை கீர்த்தி சுரேஷ் அந்த படத்தை விட்டு விலகிவிட்டதாக ஒரு தகவல் இப்போது வெளிவந்துள்ளது. எல்லம்மா படத்தின் கதையும் கதாபாத்திரமும் மிகவும் பிடித்துப் போனதால் இந்த படத்தில் நாயகியாக நடிக்க அவர் சம்மதம் தெரிவித்து கால்ஷீட்டும் தந்திருந்தார்.

ஆனால் இப்போது திடீரென அந்த படத்தில் இருந்து அவர் விலக காரணம், கதாநாயகன் மாற்றம் என்று சொல்லப்படுகிறது. இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்துடன் சினிமாவில் இப்போதுதான் நாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக நடித்தால் தனது இமேஜ் பாதிக்கப்படும். தனக்கு செட் ஆகாது என்பதால் எல்லம்மா படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் விலகியதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது.

- Advertisement -

சற்று முன்