- Advertisement -
Homeபொழுதுபோக்குநள்ளிரவு 3 மணிக்கு என்னை பிரபல நடிகர் வீட்டுக்கு வரச் சொன்னார்கள் - கமல் பட...

நள்ளிரவு 3 மணிக்கு என்னை பிரபல நடிகர் வீட்டுக்கு வரச் சொன்னார்கள் – கமல் பட நடிகை சொன்ன அந்த பரபரப்பு தகவல்

- Advertisement -

சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் என்பது மிகப்பெரிய பிரச்னையாக இருந்து வருகிறது. சினிமா வாய்ப்புக்காக ஒருபுறம் சில நடிகைகள், ஆடைகளை குறைத்துக்கொண்டு சமூக வலைதளங்களில் குத்தாட்டம் போட்டு வருகின்றனர். மறுபுறம், வாய்ப்பு வேண்டுமென்றால் அட்ஜஸ்ட்மெண்டுக்கு வா என இயக்குநர்கள், தயாரிப்பாளர் நேரடியாக அழைப்பது அதிகரித்து வருகிறது.

சினிமாவில் நடிக்க முதலில் நடிப்பு திறமை வேண்டும். பல பேர் முன்னிலையில், கேமரா முன் நின்று, பேசி, சிரித்து, அழுது நடிக்க வேண்டும். திறமையை காட்டி தங்களது நடிப்பாற்றலை வெளிப்படுத்த வேண்டும். மக்கள் மத்தியில் பெயர் பெற வேண்டும். அதன்மூலம் அடுத்தடுத்த வாய்ப்புகளை பெற வேண்டும் என்ற நிலைதான் முதலில் இருந்தது.

- Advertisement -

ஆனால் இப்போது நடிகரை, இயக்குநரை, தயாரிப்பாளரை அட்ஜஸ்ட்மென்ட் செய்து, திருப்திபடுத்தி விட்டால் அந்த நடிகைக்கு அடுத்தடுத்த படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்ற அவல நிலை, கலைத்துறைக்கே அவமானம் சேர்க்கிறது. இதனால் அட்ஜஸ்ட்மென்ட்டுக்கு ஒத்துக்கொள்ளும் நடிகைகள் தொடர்ந்து திரையில் வர, திறமையான நடிகைகள் பட வாய்ப்பின்றி வீட்டுக்குள் முடங்க வேண்டிய நிலை ஏற்படும்.

முன்பெல்லாம் ரசிகர்களை திருப்திப்படுத்த சில முன்னணி நடிகைகள் கூட சினிமாவில் சில காட்சிகளில் சற்று கூடுதலான கவர்ச்சி காட்டி நடித்தனர். ராதா, அம்பிகா, நளினி நடித்த காலங்களில் கூட அது நடந்திருக்கிறது. ஆனால் அதில் கவர்ச்சி இருக்குமே தவிர ஆபாசம் இருக்காது. ஆனால் கவர்ச்சி என்ற பெயரில், கதாநாயகிகளே ஆபாசமாக நடிக்கலாம், குலுக்கல் நடனம் ஆடலாம் என்ற முறையை கொண்டு வந்து தமிழ் சினிமாவில் வழிகாட்டியவர் நடிகை குஷ்புதான்.

- Advertisement -

அவருக்கு பின் நடிக்க வந்த ரோஜா, மீனா, ரம்பா, நக்மா, ஜோதிகா என அனைவருமே குஷ்பு வழியில், கவர்ச்சி என்ற பெயரில் ஆபாசமாக நடிக்க துவங்கினர். அதனால் கவர்ச்சி நாயகிகளின் பணியை, கலைச் சேவையை கதாநாயகிகளே சிறப்பாக செய்து, கல்லா கட்டினர். அதனால் நடிக்க வாய்ப்பு கேட்டால், அட்ஜஸ்ட்மெண்ட் நிலைக்கு புதிய நடிகைகள், நல்ல நடிகைகள் தள்ளப்பட்டனர்.

நடிகர் கமல்ஹாசனுடன் தசாவதாரம் படத்தில் நடித்தவர் மல்லிகா ஷெராவத். இவர் சிலம்பரசன் நடித்த ஒஸ்தி படத்திலும் ஒரு பாட்டுக்கு நடனம் ஆடியிருந்தார். பாலிவுட் நடிகையான இவர், சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்று பேசிய மல்லிகா ஷெராவத்,.நள்ளிரவில் 3 மணிக்கு பிரபல நடிகர் வீட்டுக்கு அழைத்தால் செல்ல வேண்டும். ஆனால் அதற்கு நான் நோ சொல்லியதால், அவருடன் நடித்த படத்தில் இருந்து என்னை தூக்கி விட்டார்கள். இந்த மோசமான செயல், என்னை கடுமையாக பாதித்தது. இப்படி அட்ஜஸ்ட்மெண்டுக்கு மறுத்தால் பல பட வாய்ப்புகள் எனக்கு வராமல் போனது, என்று கூறியிருக்கிறார் மல்லிகா ஷெராவத்.

- Advertisement -

சற்று முன்