தமிழ்நாட்டில் மாற்று அரசியலை விரும்பும் மக்கள் கண்டிப்பாக நடிகர் விஜய்க்கு ஆதரவு தருவார்கள் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. ஏனெனில் கடந்த 50 ஆண்டு காலங்களுக்கு மேலாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இரண்டு திராவிட கட்சிகள் மட்டுமே தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்த வகையில், தமிழகம் பெரிய அளவில் முன்னேற்றத்தை மாற்றத்தையோ காணவில்லை.
அதனால் தமிழக அரசியலில் மாற்றம் வேண்டும், ஆட்சியில் புது ரத்தம் பாய்ச்ச வேண்டும் என்று எதிர்பார்க்கிற மக்களுக்கு நடிகர் விஜயின் அரசியல் வருகை பெரிய மகிழ்ச்சியை ,உற்சாகத்தை தந்திருக்கிறது. விஜயின் ரசிகர்கள் மட்டுமல்லாது பொது ஜனம் மத்தியிலும் நடிகர் விஜய்க்கு பெரிய ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில் கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு தேமுதிக கட்சியை துவங்கிய நடிகர் கேப்டன் விஜயகாந்த் அந்த ஒரு ஆதரவைத்தான் மக்கள் மத்தியில் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்போது ஒரு படத்தில் நடிக்க 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் உச்ச நிலையிலும், நடிகர் விஜய் சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு அரசியலுக்கு வருவது நிச்சயம், அவருக்குள் இருக்கும் சேவை மனப்பான்மையும் மக்கள் மீதான நல்ல அபிமானத்தையும், அக்கறையும் தான் வெளிப்படுத்துவதாக கூறுகின்றனர்.
இந்நிலையில் வருகிற 23ம் தேதி விக்கிரவாண்டியில் தமிழக வெற்றி கழகம் கட்சியின் முதல் அரசியல் மாநில மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்பார் என்று கூறப்படுகிறது. ஆனால் இன்னும் அதை தவெக கட்சியின் தலைவர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இன்னும் சில தினங்களில் அவர் அறிவிக்க வாய்ப்புள்ளது.
மேலும் இந்த மாநாட்டில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் மாநாட்டில் பங்கேற்காவிட்டாலும் வீடியோக்கள் வாயிலாக தங்களது ஆதரவை, வாழ்த்துகளை தெரிவிக்க பல கட்சித் தலைவர்கள் முன் வந்துள்ளனர். அதிலும் நடிகர்களாக இருந்து அரசியல் கட்சி துவங்கிய பலரும் இதில் நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவிப்பார்கள் என்று தெரிகிறது.
குறிப்பாக நடிகர்கள் சிரஞ்சீவி, பவன் கல்யாண், ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, பாண்டிச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, நாம் தமிழர் கட்சி சீமான், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், லட்சிய திமுக தலைவர் டி ராஜேந்தர், முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் மற்றும் கர்நாடகா ஆந்திரா என பிற மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் வீடியோ வாயிலாக தங்களது வாழ்த்துக்களை நடிகர் விஜய்க்கு தெரிவிக்க உள்ளனர். இந்த வீடியோக்கள் மாநாட்டில் காட்டப்படும். மேலும் இந்த மாநாட்டில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.





