தமிழ் சினிமாவின் கடந்த 1980, 90களில் பல அழகிய சிறந்த நடிகைகள் நடித்தனர் என்றால் அது மிகையல்ல. ஆனால் சொற்பமான எண்ணிக்கை படங்களில் நடித்த அவர்கள் பிறகு, தெலுங்கு மலையாளம் ஹிந்தி என மாறிப்போய் ஒரு கட்டத்துக்கு பிறகு சினிமாவில் நடிப்பதை விட்டு விலகி திருமண வாழ்க்கையில் செட்டில் ஆகி விட்டனர்.
அப்படி பல நடிகைகள் திருமணம் ஆகி குடும்பத்துடன் செட்டிலான நிலையிலும், இப்போது மீண்டும் படங்களில் நடிக்கும் ஆர்வமான மனநிலைக்கு வந்து விடுகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் சில நடிகைகள் நடிக்க வந்து விட்டனர். குறிப்பாக நடிகை நதியா சமீப காலமாக தமிழ் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
அதேபோல் நடிகை சிம்ரன் மீண்டும் நடிக்க துவங்கியிருக்கிறார். நடிகை சினேகா தி கோட் படத்தில் நடித்திருந்தார். அதேபோல் இப்போது அழகி பட நாயகி நந்திதா தாஸூம் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி என்று கொடுக்கிறார். கடந்த 1990 களில் மணிரத்தினம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால், தங்கர் பச்சான் இயக்கிய அழகி போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் நந்திதா தாஸ்.
இவர் சம்பளத்துக்காக நடிக்காமல், நடிப்பின் மீது கொண்ட அதீத ஆர்வமும் கலையின் மீதான ஈடுபாட்டின் வெளிப்பாடாகவும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய ஒரு அழுத்தமான நடிகையாக இருக்கிறார். இந்தியில் இவர் நடித்த பயர் படம் பெரிய அளவில் பேசப்பட்ட படமாகவும், சர்ச்சைக்குரிய படமாகவும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது ஏறக்குறைய 50 வயதுகளை நெருங்கிக் கொண்டிருக்கும் நந்திதா தாஸ் மீண்டும் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். மீண்டும் அவர் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பிப்பது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் சூர்யா 44 படத்தில் தான் நந்திதா தாஸ் ஒரு முக்கியமான கேரக்டரின் நடிக்கிறார் என்பது லேட்டஸ்ட் தகவலாக வெளிவந்துள்ளது. இந்த படத்தில் அவருக்கு மிகவும் அழுத்தமான ஒரு கேரக்டர் தரப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது மீண்டும் திரையில் நந்திதா தாஸை காண ரசிகர்கள் இப்போதே ஆர்வம் காட்ட துவங்கி விட்டனர்.





