நடிகர் ரஜினிகாந்த் மகள்கள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த் இருவருமே சினிமாவில் நடிக்கவில்லை. ஆனால் சினிமா இயக்குனராக மிகவும் ஆர்வம் கொண்டவர்கள். ஏற்கனவே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது கணவர் தனுஷ் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்த 3 என்ற படத்தை டைரக்ட் செய்தார், இந்த படம் சரியாக போகவில்லை.
எனினும் இரண்டாவது முயற்சியாக கௌதம் கார்த்திக் நடித்த வை ராஜா வை என்ற படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் டைரக்ட் செய்தார். அந்த படமும் சரியாக போகாமல் பிளாப் ஆனது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குனர் செல்வராகவன், பி வாசு போன்றவர்களிடம் சில படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். அந்த வகையில் தன்னுடைய இயக்குனர் அறிவை பயன்படுத்தி படங்களை இயக்கும் ஆர்வத்தில் இரண்டு படங்களை இயக்கினார். ஆனால் இரண்டு படங்களுமே மிகப்பெரிய தோல்வியை சந்தித்தன.
இந்நிலையில் சில ஆண்டுகள் அமைதி காத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த், மீண்டும் 3வது முறையாக லால் சலாம் என்ற படத்தை இயக்கினார். இந்த படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் இரட்டை கதாநாயகர்களாக நடித்தனர். இந்த படத்தில் கேமியோ ரோலில் நடிகர் ரஜினிகாந்த் நடித்தார். படத்தில் 40 நிமிடங்களுக்கு மேல் ரஜினி நடித்த காட்சிகள் வந்தன.
நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற மாபெரும் வெற்றி படத்திற்கு பிறகு ரஜினி நடித்த படம் என்பதால், நிச்சயமாக லால் சலாம் பெரிய அளவில் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய மூன்று படங்களுமே படு மோசமாக தோல்வி அடைந்த நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படத்தை தயாரித்த லைக்கா நிறுவனம் மீது குறை கூறினார்.
லால் சலாம் படம் குறித்த விளம்பரத்தை இன்னும் அதிகமாக செய்திருக்க வேண்டும் என்று குற்றம் சாட்டினார். ஆனால் ரஜினிகாந்த், ஏ ஆர் ரகுமான், லைகா ப்ரொடக்சன்ஸ் என்ற மூன்று பெரிய கூட்டணி இருந்தும் இந்த படம் மிக மோசமாக தோற்றுப் போனதற்குஐஸ்வர்யா ரஜினிகாந்த் டைரக்ஷன்தான் காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்தது.
கடந்த பிப்ரவரி மாதம் ரிலீசான லால் சலாம் படம் 7 மாதங்கள் ஆகியும் இன்னும் ஓடிடியில் ரிலீஸ் ஆகவில்லை. வழக்கமாக ஒரு படம் தியேட்டர்களில் ரிலீசானால் 4 வாரங்கள் அல்லது 8 வாரங்களுக்குள் ஓடிடியில் வெளிவந்து விடுகிறது. ஆனால் 7 மாதங்கள் கடந்தும் லால் சலாம் ஓடிடியில் ரிலீஸ் ஆகவில்லை. படத்தின் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சமீபத்தில் இது குறித்து பேசியுள்ளார் அப்போது அவர், லால் சலாம் படம் விரைவில் ஓட்டிட்டியில் வெளியாகும். இந்த படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. தியேட்டர்களில் பார்க்காத படத்தின் பல காட்சிகள் ஓடிடியில் வரும் என்று கூறியிருக்கிறார். ஆனால் எப்போது படம் ரிலீஸ் என்ற தகவலை அவர் கூறவில்லை.





