விஜய் டிவியில் நடந்த 7 ஆண்டுகளாக மக்களின் பேராதரவுடன் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ் நிகழ்ச்சி. வரும் அக்டோபர் 6ம் தேதி பிக்பாஸ் சீசன் 8 துவங்க இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருக்கிறார். கடந்தாண்டு வரை பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், இப்போது இந்த சீசன் முதல் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவது உறுதியாகியுள்ளது.
கமல்ஹாசன் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்கும் வரை போட்டியாளர்களை வழிநடத்துவதில் அவரது பாணி, பெரிய அளவில் பார்வையாளர்களை கவர்ந்தது. வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே வந்தாலும் கமல்ஹாசனின் பேச்சும், அவரது கிண்டல் கேலியும் பார்வையாளர்களை வசப்படுத்தியது. ஆனால் கடந்த சீசனில் கமல்ஹாசனும் விமர்சனத்தில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரை ஆரம்பத்தில் பிரபல நடிகர்கள், முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள், காமெடி நடிகர்கள் என பலரும் ஆர்வமாக கலந்து கொண்டனர். ஆனால் ஒரு கட்டத்துக்கு பிறகு இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் மீது கடுமையான விமர்சனங்களும், கேலி கிண்டல்களும் எழுந்தன. இதனால் அவர்களது இமேஜ் பாதிப்புக்குள்ளான நிலையில் பலரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க தயங்குகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பங்கேற்க அழைத்தாலும் வர மறுக்கின்றனர்.
அது மட்டும் இன்றி 100 நாட்களுக்கு மேல் செல்போன் பயன்படுத்தாமல் இருப்பது என்பது பலரால் முடியாத காரியம். கணவன், மனைவி, பிள்ளைகள் என உறவுகளை விட்டுவிட்டு பிக்பாஸ் வீட்டுக்குள் இருப்பதும் பலருக்கு பலத்த சிரமத்தை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமின்றி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சில வாரங்களில் வெளியேற்றப்படுவது சிலரை அதிருப்தியடைய வைக்கிறது.
இந்நிலையில் இந்த ஆண்டு பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி வருகிற அக்டோபர் மாதம் 6ம் தேதி துவங்குகிறது. நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் குறிப்பிட்ட சிலர் பங்கேற்க உள்ளதாக தொடர்ந்து தகவல்கள் பரவி வந்தாலும், இன்னும் அந்த தகவல்கள் உறுதி செய்யப்படவில்லை. அதனால் இந்த முறை யார் பங்கேற்பார்கள் என்பதில் தொடர்ந்து சஸ்பென்ஸ் நீடிக்கிறது.
ஆனால் இப்போதைய லேட்டஸ்ட் தகவல்படி காமெடி நடிகர் செந்தில், பிக்பாஸ் போட்டியில் பங்கேற்க இருக்கிறார் இந்த தகவல் வெளிவந்துள்ளது. அவர் பங்கேற்கும் பட்சத்தில் கண்டிப்பாக பார்வையாளர்கள்மத்தியில் பலத்த வரவேற்பையும் கவனத்தையும் பெறுவார் என்பதில் சந்தேகம் இல்லை. எனினும் இன்னும் அவர் கலந்து கொள்கிறார் என்பது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளிவரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.





