இறுதிச்சுற்று மற்றும் சூரரைப் போற்று ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து அடுத்ததாக புறநானூறு படத்தில் சுதா கொங்கரா இயக்க இருந்தார். ஆனால் அதற்கான திட்டம் பாதியிலேயே நின்று போனது. இதில் சூர்யாதான் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தது. அவரின் 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் இதனை தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது.
படத்தில் மலையாள நடிகை நஸ்ரியா நசீம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது இதே போல் துல்கர் சல்மான் மற்றும் பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவும் இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்டது. இப்படி எடுத்த எடுப்பிலேயே மிகப்பெரிய நட்சத்திரங்கள் படத்தில் உள்ள நுழைந்ததால் இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கச் செய்தது.
இந்தி மொழிக்கு எதிராகத்தான் இந்த திரைப்படம் எடுக்கப்படுவதாகவும் கூறப்பட்டது. இதற்காக மதுரை அமெரிக்கன் கல்லூரியில் சூட்டிங் நடைபெற ஏற்பாடுகள் நடைபெறுவதாகவும், திருச்சி, சிதம்பரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பணிகள் நடைபெறும் என்றும் சினிமா விமர்சகர்கள் கூறினர்.
ஆனால் திடீரென இதற்கான பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. சொல்லாமல் கொள்ளாமல் சூர்யா தனது அடுத்த படத்தில் நடிக்க கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார். தற்போது அவர் தனது 44-வது திரைப்படத்திற்காக, கார்த்திக் சுப்புராஜ் உடன் இணைந்து பணியாற்றி வருகிறார். அவரும் சுதா கொங்கராவும் திடீரென பிரிந்ததற்கான காரணங்கள் ஏதும் தெரியவில்லை.
பருத்திவீரன் திரைப்பட விவகாரத்தில் அமீர் மற்றும் ஞானவேல் ராஜா இடையே கருத்து மோதல் இழந்தது. இதில் சுதா அமீருக்கு ஆதரவாக பேசியதால் இந்த முடிவை சூர்யா எடுத்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் ஒரு பேட்டியில், சாவர்க்கர் தனது மனைவி கல்வி கற்க கட்டாயப்படுத்தி இருந்தார் என்று பேசி இருந்தார். ஆனால் அவர் கூறியது உண்மைக்கு மாறான தகவல் என்று பலரும் இணையத்தில் பதிவிட்டனர்.
இந்த நிலையில் சுதா கொங்கரா விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். ஜோதிபா புலேவுக்கு பதிலாகவே அவர் சாவர்க்கரை குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில், ஒரு வரலாற்று மாணவியாக அதன் உண்மை தன்மையை தான் சோதித்து இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அது என் தவறு தான் எதிர்காலத்தில் இதனை நான் சோதிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார். இனிமேல் அப்படி நேராது என்று தான் உறுதி அளிப்பதாகவும் சுதா கொங்கரா தனது பதிவில் தெரிவித்துள்ளார்.





