- Advertisement -
Homeபொழுதுபோக்குபெண்களை அவதூறு பேசியதாக டாக்டர் காந்தராஜ் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு - மன்னிப்பு கேட்டா...

பெண்களை அவதூறு பேசியதாக டாக்டர் காந்தராஜ் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு – மன்னிப்பு கேட்டா விட்டுடுவாங்களா? – அடுத்து பயில்வான் மீதும் சட்டம் பாயுமா?

- Advertisement -

சமீப காலமாக யூடியூப் சேனல்களில் நடிகைகள் குறித்து அந்தரங்கமாக பேசுவது சிலருக்கு வழக்கமாகி விட்டது. மக்கள் மத்தியில் தங்கள் பேட்டிகளை காண வைக்கவும், தங்களுக்கான கவனத்தை ஈர்த்து அதிகப்படுத்தவும் இதுபோன்று சிலர் பேசி வருவது பலவிதங்களில் நடிகைகளை பாதிப்படைய செய்கிறது. திரைப்பட நடிகைகள் குறித்து தொடர்ந்து அவதூறு பரப்பும் விதமாக பேசி வரும் டாக்டர் காந்தராஜ் மன்னிப்பு கேட்டுள்ள நிலையில் அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கேரளா திரையுலகில் அதிகரித்து வரும் பாலியல் தொல்லைகள் குறித்து ஹேமா கமிட்டி வெளியிட்ட அறிக்கை விசாரணை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மலையாள நடிகைகள் சிலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த சில நடிகர்கள், இயக்குனர்கள் மீது புகார்கள் அதிகரித்த நிலையில், தமிழ் சினிமாவிலும் அதுபோன்ற பாலியல் குற்றங்களை தடுக்க தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கீழ் பெண்கள் பாதுகாப்பு கமிட்டி அமைக்கப்பட்டு அதன் தலைவராக நடிகை ரோகிணி இருந்து வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் நடிகர் பயில்வான் ரங்கநாதன், டாக்டர் காந்தராஜ் போன்ற சிலர் தொடர்ந்து நடிகைகள் மீது அவதூறு பரப்பும் விதமாக தவறான கருத்துகளை பரப்பி வருகின்றனர். இதுகுறித்து புகார் எழுந்த நிலையில் டாக்டர் காந்தராஜ், தனியார் தொலைக்காட்சியில் திரைப்பட நடிகைகள் குறித்து நான் கொடுத்த பேட்டி பல நடிகைகள் மனதை புண்படுத்தி இருக்கிறது என்பதை அறிகிறேன். யாரையும் காயப்படுத்த வேண்டும் என்பது என் நோக்கம் அல்ல. இருப்பினும் இந்த பேட்டி கொடுத்ததற்காக வருத்தம் தெரிவிக்கிறேன், என்று டாக்டர் காந்தராஜ் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இந்நிலையில், நடிகை ரோகிணி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதில் செப்டம்பர் 7ம் தேதி யூடியூப் சேனல் ஒன்றில் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் பேசியுள்ள டாக்டர் காந்தராஜ் என்பவர், நடிகைகளை ஒட்டுமொத்தமாக கீழ்த்தரமாக பேசியதோடு அனைத்து நடிகைகளும் பாலியல் தொழிலாளர்கள் என்பது போல பேசி உள்ளதை கண்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தோம்.

- Advertisement -

எந்த விதமான ஆதாரமும் இல்லாமல் டாக்டர் காந்தராஜ் இதுபோல் பேட்டி அளித்துள்ளார். மேடை நாகரிகமோ, சமூகப் பொறுப்புணர்வோ இல்லாமல் தனக்கு தோன்றியதை எல்லாம் அவர் பேசியிருக்கிறார். அனைத்து நடிகைகளையும் அவர் கொச்சைப்படுத்தி பேசியுள்ளது தண்டனைக்குரிய குற்றச் செயலாகும். எனவே டாக்டர் காந்தராஜ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறி இருக்கிறார்.

இதையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார், டாக்டர் காந்தராஜ் மீது 296 (பொதுவெளியில் ஆபாசமாக பேசுதல்) 75 (பாலியல் தொந்தரவு) 79 (பெண்களின் மாண்பை அவமதித்தல்) 352 (அவதூறாக பேசுதல்) 67 (தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல்) ஆகிய 5 சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது நடிகைகள் குறித்து அவதூறு பேசும் பிரபலங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் விரைவில் நடிகர் பயில்வான் ரங்கநாதனும் சிக்கிக் கொள்வார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்