தமிழ் சினிமாவில் 50 வயது நெருங்கிய போதும் கல்லூரி மாணவராகவே நடித்துக் கொண்டிருந்தவர் நடிகர் முரளி. அவர் நடுத்தர வயதை கடந்த பிறகும் கல்லூரி மாணவர் போலவே தோற்றத்தில் காட்சியளித்தார். அதனால் தொடர்ந்து பல படங்களில் கல்லூரி மாணவராகவே அவர் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றார்.
நடிகர் முரளி பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். குறிப்பாக அவரது நடிப்பில் வெளிவந்த பகல் நிலவு, இதயம், புது வசந்தம், பொற்காலம், வெற்றிக்கொடி கட்டு, இரணியன், சின்ன பசங்க நாங்க, காலமெல்லாம் காதல் வாழ்க, கீதாஞ்சலி, பூமணி, சுந்தரா ட்ராவல்ஸ் என பல வெற்றி படங்களில் நடித்தவர் நடிகர் முரளி.
முரளியைப் பொறுத்தவரை நல்ல கதையம்சம் உள்ள படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தும் சிறந்த நடிகராக ஜொலித்தவர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர். ஆனால் அவர் 50 வயது நெருங்கிய நிலையில், திடீரென மண்ணை விட்டு மறைந்தது தமிழ் சினிமாவுக்கு மிகப் பெரிய பேரிழப்பாக இருந்தது.
அவரது மகன் அதர்வா பாணா காத்தாடி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து பரதேசி, ஈட்டி, 100, குருதி ஆட்டம், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும், தள்ளிப் போகாதே, கணிதன், சண்டிவீரன், இரும்புக் குதிரை உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இதில் டைரக்டர் பாலா இயக்கத்தில் பரதேசி படத்தில் அதர்வாவின் நடிப்பு வேற லெவலில் இருந்தது.
பரதேசி படத்தில் அந்த கேரக்டரில் அப்படி ஒரு சிறப்பான நடிப்பை யாராலும் தர முடியாது என்று சொல்லும் அளவுக்கு, அதர்வாவின் நடிப்பு பரதேசி படத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது. ஆனால் அதற்கு பிறகு அதர்வா நடித்த படங்கள் எதுவும் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பையோ ஆதரவையோ பெறவில்லை. அவர் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளும் உருவாகவில்லை. தமிழ் சினிமாவில் முரளி அளவுக்கு அவரது மகன் அதர்வா ஜெயிக்க முடியவில்லை என்பதே இதில் கசப்பான உண்மை.
இந்நிலையில் நடிகர் அதர்வா ஒரு முக்கியமான அதிரடி முடிவு எடுத்திருக்கிறார். அதன்படி இனி அவரே படம் டைரக்ட் செய்து நடிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அவரே ஹீரோவாக நடிப்பாரா அல்லது வேறு நடிகர்களை ஹீரோவாக நடிக்க வைத்து அவர் படம் டைரக்ட் செய்வாரா என்பதில் இன்னும் குழப்பம் நீடிக்கிறது. ஆனால் இனி டைரக்சன் பக்கம் தனது முழு கவனத்தை செலுத்துவது என்று அதர்வா முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





