இப்போது அஜித் ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படத்தின் அப்டேட் தான். கிட்டத்தட்ட விடாமுயற்சி படம் தொட்டு ஒன்றரை ஆண்டுகள் ஆகி இருப்பதால், அதன் டீசர் அல்லது ரிலீஸ் தேதிக்கான அறிவிப்பு எப்போது வரும் என்று அஜித் ரசிகர்கள் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய இதன் படப்பிடிப்பு, தற்போது எந்த நிலையில் இருக்கிறது என்று யாருக்கும் தெரியவில்லை. சில நாட்களுக்கு முன்பு அந்த திரைப்படத்தின் சூட்டிங் அஜர்பைஜான் நாட்டின் முடிவு பெற்றதாக மட்டும் அறிவிப்பு வெளியானது. பிறகு படக்குழுவினர் ஹைதராபாத் சென்றனர்.
அங்கு என்ன பணிகள் நடைபெற்றது, சூட்டிங் முடிக்கப்பட்டு விட்டதா என்கின்ற எந்த தகவலும் தெரியவரவில்லை. இது ஒரு பக்கம் இருக்க, குட் பேட் அக்லி திரைப்படத்தின் மீதும் ரசிகர்களின் பார்வை திரும்பியுள்ளது. இந்த படத்திற்கு முன்பாக மார்க் ஆண்டனி என்னும் சூப்பர் ஹிட் வெற்றியை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் கொடுத்திருந்தார்.
அதே எனர்ஜியுடன் தற்போது அவர் குட் பேட் அக்லி படத்தை எடுத்து வருகிறார். தெலுங்கின் முன்னணி நிறுவனமான மைத்திரி மூவிஸ் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத் படத்திற்கு இசையமைத்து வருகிறார். ஹைதராபாத்தில் இதன் சூட்டிங் பணிகள் நடைபெற்றன.
இந்தத் திரைப்படம் ஏற்கனவே பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. தற்போது விடாமுயற்சி திரைப்படமும் தள்ளிக் கொண்டே போய் இருப்பதால், குட் பேட் அக்லிக்கு பிறகு அது வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் அந்த திரைப்படத்திலிருந்து புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதாவது அர்ஜுன் தாஸ், படத்தில் அஜித்திற்கு வில்லனாக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே இவர் கைதி திரைப்படத்தில் அன்பு கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி இருந்தார். இதேபோல் மாஸ்டர் திரைப்படத்திலும் விஜய்க்கு வில்லனாக வந்தார். தற்போது இவர் அஜித்திற்கும் வில்லனாகி இருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் கொஞ்சம் அதிகரிக்க செய்திருக்கிறது.





