- Advertisement -
Homeபொழுதுபோக்குதலைவர் 173 படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஏற்கப் போகும் கேரக்டர் அதுதானா? இது வெற லெவல்...

தலைவர் 173 படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஏற்கப் போகும் கேரக்டர் அதுதானா? இது வெற லெவல் கதையா இருக்குதே? – உற்சாகத்தில் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்!

- Advertisement -

நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் படம் தலைவர் 173 என்ற தற்காலிக டைட்டிலில் உருவாக உள்ளது. இந்த படத்துக்கான இயக்குனர் தேர்வில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக தலைவர் 173 படம் சில மாதங்களாக பலத்த குழப்பத்தை தந்தது. முதலில் இந்த படத்தை இயக்குனர் சுந்தர் சி இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்பிறகு அவர் அந்த படத்தில் இருந்து சுந்தர் சி விலகிய நிலையில் டான் பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இந்த படத்தை இயக்குவார் என்றும் தகவல் வெளியானது. அவரும் ஒரு தெலுங்கு பட பிரச்னையால் இந்த படத்தில் இருந்து விலகினார். அடுத்து டிராகன் பட இயக்குனர் அஸ்வத் மாரிமுத்துதான் தலைவர் 173 படத்தை இயக்கப் போகிறார் என்றும் கூறப்பட்டது.

- Advertisement -

ஆனால் இந்த படத்தின் கதை விஷயத்தில் ரஜினிக்கு போதிய திருப்தி ஏற்படவில்லை என்றும் தகவல் வெளியானது. இதற்கிடையே சில நாட்களுக்கு முன்பு ராஜ்கமல் நிறுவன அலுவலகத்தில் இருந்து அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் போட்டோசெஷன் நடந்துள்ளது. அதில் டாக்டர் கெட்டப்பில் பக்காவான ஸ்டைலில் மாஸ் ஆக ரஜினி போஸ் தந்த போட்டோசெஷன் எடுத்த தகவல் இப்போது கசிந்துள்ளது. அதனால் இந்த படத்தில் ரஜினிகாந்த் டாக்டராக நடிக்கிறார் என்பது உறுதியாக விட்டது.

தனது 50 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் 172 படங்களில் ரஜினிகாந்த் பல்வேறு கேரக்டரில் நடித்திருந்தாலும் இதுவரை டாக்டராக நடித்தது இல்லை. சந்திரமுகி படத்தில் அவர் டாக்டர் என்றாலும் மனநல டாக்டர் என்றுதான் கூறப்பட்டார். நான் சிவப்பு மனிதன் படத்தில் கிளமைாக்ஸில் சத்யராஜை கொல்வதற்காக சில நிமிடங்கள் டாக்டர் போல மருத்துவமனைக்குள் வருவார். ஆனால் இந்த படத்தில் முழு நீள டாக்டர் கேரக்டர் என்றும் கூறப்படுகிறது. இன்னும் சிலர் வடசென்னையில் ஜெயச்சந்திரன் திருவேங்கடம் என 2 டாக்டர்கள் பிரபலமாக இருந்தனர்.

- Advertisement -

அவர்கள் 5 ரூபாய் டாக்டர் என மக்களால் அழைக்கப்பட்டனர். ஏழை எளிய மக்களுக்கு 5 ரூபாய் மட்டுமே கட்டணமாக பெற்றுக்கொண்டு மருத்துவ சேவை செய்தனர். 5 ரூபாய் மட்டுமே பீஸ் வாங்கினர். 2 பேருமே இப்போது மறைந்து விட்ட நிலையில் அவர்களின் சொந்தக் கதையைத்தான் அஸ்வத் மாரிமுத்து படமாக எடுக்கிறார் என்று கூறப்படுகிறது. மேலும் சினிமாவுக்கு தக்கபடி திரைக்கதையில் அஸ்வத் மாரிமுத்து மாற்றம் செய்திருக்கிறார்.

இந்த கதைக்காகவே அஸ்வத்திற்கு ரஜினிகாந்த் கால்ஷீட் கொடுத்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. வருகிற 26ம் தேதி தலைவர் 173 படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது. தலைப்பில் டாக்டர் என்ற வார்த்தை இருக்க வாய்ப்பு அதிகம் என்கின்றனர். இந்த படத்தில் ரஜினியின் மகனாக இயக்குனர் நடிகர் பிரதீப் ரங்கநாதன் அல்லது மலையாள நடிகர் பசில் ஜோசப் நடிக்க இருப்பதாகவும் சொல்கிறார்கள் ஆனால் இன்னும் அது உறுதியாகவில்லை.

- Advertisement -

சற்று முன்