- Advertisement -
Homeபொழுதுபோக்குஎவ்வளவு வசதி வந்தாலும் பங்களா வீட்டில் வசிக்க என் குடும்பத்தை விடமாட்டேன் - ஓப்பன் ஸ்டேட்மெண்ட்...

எவ்வளவு வசதி வந்தாலும் பங்களா வீட்டில் வசிக்க என் குடும்பத்தை விடமாட்டேன் – ஓப்பன் ஸ்டேட்மெண்ட் கொடுத்து ஆச்சரியப்படுத்திய நடிகர் விஜய் சேதுபதி

- Advertisement -

நடிகர் விஜய் சேதுபதி, தமிழ் சினிமாவில் மிகவும் கவனிக்கப்படுகிற ஒரு ஆகச்சிறந்த கலைஞனாக தன்னை வெளிப்படுத்தி வருகிறார். துவக்கத்தில் துணை நடிகராக, பிறகு கதாநாயகனாக, பிறகு வில்லனாக, பிறகு குணச்சித்திர நடிகராக எந்த கேரக்டரிலும் தன்னை சிறந்த கலைஞனாக
வெளிப்படுத்தி வருகிறார்.

அவரது நடிப்பில், 50வது படம் மகாராஜா இன்று ரிலீஸ் ஆகி தியேட்டர்களில் ஓடிக்கொண்டு இருக்கிறது. படம் குறித்து பாசிட்டிவ் ஆன விமர்சனங்களே வந்துள்ள நிலையில், இந்த படம் அவரது சினிமா கேரியரில் முக்கியத்துவம் பெற்ற ஒரு படமாக அமையவும் வாய்ப்புள்ளது. ஏனெனில் சமீபகாலமாக அவரது படங்கள் பெரிய அளவில் ஹிட் கொடுக்கவில்லை.

விஜய் சேதுபதியை பொருத்தவரை, மிக வித்யாசமான சிந்தனையாளராக தன்னை வெளிப்படுத்திக் கொள்பவர். அதை அவரது நேர்காணல்களில் தெளிவாக பார்க்க முடியும். சினிமா சாராத ஒரு சாதாரண மனிதராக அவர் பேசும்போது, அதில் யதார்த்தமும் உண்மையுமே தெளிவாக பளிச்சிடும். கதாநாயகனாக தொடர்ந்து நடிக்காமல், வில்லனாக அவர் நடித்ததே இந்த மார்க்கெட் சரிவுக்கு காரணம் என்று பலரும் கூறி வருகின்றனர்.

எனினும் மகாராஜா படம் மிக நன்றாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று ஹிட் படமாகும் பட்சத்தில், விஜய் சேதுபதியின் சுறுசுறுப்பான இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டத்தை எதிர்பார்க்கலாம். அதே போல், அவரது நடிப்பில் மிஷ்கின் இயக்கிய ட்ரெயின் படமும் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. அந்த படமும் பெரிய வெற்றியைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மகாராஜா படம் பிரமோசனுக்காக தொடர்ந்து நேர்காணல்களில் நடிகர் விஜய் சேதுபதி பங்கேற்று வருகிறார். நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத், விஜய் சேதுபதியை சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்காக அவரை நேர்காணல் செய்தார். அப்போது பல விஷயங்களை வெளிப்படையாக விஜய் சேதுபதி பகிர்ந்துக்கொண்டார்.

அப்போது விஜய் சேதுபதி கூறுகையில், இன்னும் எவ்வளவு பெரிய வசதிகள் வந்தாலும், பல அறைகள் கொண்ட பங்களா வீட்டுக்கு குடிபோக மாட்டேன். அப்படி பங்களா வீட்டில் வசிக்க என் குடும்பத்தை விட மாட்டேன். கூப்பிட்டால் கேட்கிற தூரத்தில், அவர்களோ, நானோ வீட்டுக்குள் இருக்க வேண்டும். பெரிய வீடு, தனித்தனி அறைகளில் முடங்குவது உறவுகளுக்குள் இடைவெளியை ஏற்படுத்தும். அப்படி ஒரு பிரிவும், இடைவெளியும் ஏற்பட்டால் பிறகு உறவுகளை இணைப்பது மிகவும் கஷ்டம். அதனால், வீடு அளவானதாக, புழங்குவதற்கு ஏற்றதாக இருந்தால் போதும், என்று கூறியிருக்கிறார்.

சற்று முன்