- Advertisement -
Homeபொழுதுபோக்குபொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடிக்க ஆசைப்பட்ட திரிஷா... பதிலுக்கு மணிரத்னம் கூறிய வார்த்தைகள்...

பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடிக்க ஆசைப்பட்ட திரிஷா… பதிலுக்கு மணிரத்னம் கூறிய வார்த்தைகள் இதுதான்…

- Advertisement -

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் இங்கு பலருக்கும் பரிச்சயமான ஒன்று. புத்தகங்களை விரும்பி படிக்காதவர்களில் பெரும்பாலானோர் கூட, பொன்னியின் செல்வன் நாவலை ஒருமுறை புரட்டி பார்த்திருப்பார்கள். அப்படி, கற்பனை உலகத்தில் காவியமாய் ஜொலித்தது பொன்னியின் செல்வன் காவியம்.

 

- Advertisement -

சோழர்களின் வாழ்வியலை மையமாக வைத்து இந்த நாவல் எழுதப்பட்டது. இதனை படமாக்கும் முயற்சி அப்போதிலிருந்தே பெரிய அளவில் பேசப்பட்டு வந்தது. மறைந்த நடிகரும் முன்னாள் முதலமைச்சருமான எம்ஜிஆர், பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக எடுத்துவிட முனைப்பு காட்டினார்.

 

- Advertisement -

ஆனால் அது நடைபெறவில்லை. பிறகு ஒவ்வொரு காலகட்டங்களிலும் பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படம் ஆக்குவது குறித்த பேச்சு ஏதாவது ஒரு வகையில் எழுந்து வந்தது. இப்படியான சூழலில் தான் அதனை தனது இயக்கத்தின் மூலம் சாத்தியப்படுத்தினார் இயக்குனர் மணிரத்னம்.

 

பொன்னியின் செல்வனாக ஜெயம் ரவி நடிக்க, விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், ஐஸ்வர்யா லட்சுமி, பிரபு, விக்ரம் பிரபு உள்பட ஏராளமான ஒரு நடிப்பில் பொன்னியின் செல்வன் திரைப்படம் எடுக்கப்பட்டது. இதன் முதல் பாகம் 2021 ஆம் ஆண்டு வெளியானது. ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே முதல் பாகத்தில் சுவாரசியமான காட்சிகளை புகுத்தி அசர வைத்திருந்தார் மணிரத்னம்.

 

குறிப்பாக படத்தில் ஏ ஆர் ரகுமான் இசையை மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. முதல் பாகம் எந்தவித தொய்வும் இன்றி விறுவிறுப்பாக அமைந்தது. பாகுபலி திரைப்படம் அளவுக்கு பிரம்மாண்டமாகவும் கமர்சியல் ஆகவும் இல்லை என்றாலும், அந்தக் கதைக்கு கிட்டத்தட்ட 70% நெருக்கமாக சென்று பொன்னியின் செல்வன் எடுத்திருந்தார் மணிரத்னம்.

 

பிறகு இரண்டாம் பாகமும் வெளியாகி வசூல் ரீதியாக சாதனை படைத்தது. இந்த திரைப்படத்தில் குந்தவையாக நடித்திருந்த திரிஷா மிகப்பெரிய அளவில் பேசப்பட்டார். இந்த நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதாவது அவர் நந்தினி கதாபாத்திரத்தில் நடிக்க தான் முதலில் மணிரத்னத்திலும் விருப்பம் தெரிவித்தாராம். ஆனால் இயக்குனர் எடுத்த எடுப்பிலேயே அது முடியாது என்று கண்டிப்பாக கூறிவிட்டாராம். இதற்கு ஐஸ்வர்யா ராய் தான் சரியாக இருப்பார் என்று அவர் தெரிவிக்க, திரிஷாவும் அதனை ஒப்புக்கொண்டு குந்தவை கதாபாத்திரத்தில் நடித்ததாக திரைத்துறை வட்டாரத்தில் பேசப்படுகிறது.

 

- Advertisement -

சற்று முன்