- Advertisement -
Homeபொழுதுபோக்குதனுஷின் இட்லி கடை திரைப்படத்தில் அசோக் செல்வன் இருக்கிறாரா... நடிகரே தெரிவித்த பதில் இதோ...

தனுஷின் இட்லி கடை திரைப்படத்தில் அசோக் செல்வன் இருக்கிறாரா… நடிகரே தெரிவித்த பதில் இதோ…

- Advertisement -

நடிப்பைக் காட்டிலும் இயக்கத்தில் தற்போது தனுஷ் மிகுந்த ஆர்வத்தை காட்டி வருகிறார் என்று தான் கூற வேண்டும். திரைப்படம் தொடர்பாக அவர் சமீபத்தில் எடுக்க முடிவுகள் இதைத்தான் காட்டுகின்றன. மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்ட தனுஷ், தனது ஐம்பதாவது திரைப்படத்தை அவரே இயக்கி நடித்தார்.

 

- Advertisement -

ராயன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், தனது ரசிகர்களுக்காகவே இதை செய்ததாக தனுஷ் கூறினார். மிகப்பெரும் எதிர்பார்ப்பில் வெளியான அந்த திரைப்படம் வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்தாலும், விமர்சனத்தில் அந்த அளவு கவனத்தை ஈர்க்கவில்லை.

 

- Advertisement -

சொல்லப்போனால் இரண்டாம் பாதியில் அவரது எழுத்தும் திரைக்கதையும், மிகவும் பலவீனமாக இருந்ததாக பலரும் வெளிப்படையாக கருத்து தெரிவித்தனர். திடீரென எதிரிகளாகும் தம்பிகள், வில்லன் வீட்டிலேயே படிக்கும் தம்பி கதாபாத்திரம், வந்தவரையெல்லாம் வெட்டுகிற தனுஷின் தங்கை ரோல் என அனைத்தும் வெறும் காட்சிக்காக மட்டுமே வைக்கப்பட்டிருந்தது.

 

இப்படியான சூழலில், தனுஷின் இயக்கத்தில் அடுத்த திரைப்படமான நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது. இந்த திரைப்படத்தின் மூலம் தனது அக்காவின் மகனை ஹீரோவாக்கி இருக்கும் தனுஷ், காதலை மையப்படுத்தி கதையை எழுதி இருக்கிறார்.

 

ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கும் இந்த படத்தில் இருந்து சமீபத்தில் ஒரு பாடல் வெளியாகி ஹிட் அடித்தது. இருப்பினும் ராயன் திரைப்படத்தின் விமர்சனம் கலவையாக இருந்ததால், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் மீது அந்த அளவு எதிர்பார்ப்பு இல்லை. இப்படியான சூழலில் தான் மீண்டும் இயக்கத்தை கையில் எடுத்திருக்கிறார் தனுஷ். இந்த முறை தனது படத்திற்கு இட்லி கடை என பெயர் வைத்திருக்கிறார்.

 

நித்யா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இந்த திரைப்படத்தில் அருண் விஜய்க்கு வில்லன் கதாபாத்திரம் என்று கூறப்படுகிறது. தற்போது தேனியில் இதன் சூட்டிங் பணிகள் நடைபெற்று வருகின்றன. படத்தில் வளர்ந்து வரும் நடிகர் அசோக்செல்வன் இடம் பெற்று இருப்பதாக தகவல் வெளியாகின. அவருக்கு தனுஷின் சகோதரர் கதாபாத்திரம் என்றும் கூறப்பட்டது. ஆனால் இதனை நடிகர் முற்றிலுமாக மறுத்திருக்கிறார். தனுஷ் உடன் எதிர்காலத்தில் இணைந்து பணியாற்ற விருப்பம் என்றும் ஆனால் தற்போது இந்த திரைப்படத்தில் தான் இல்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

- Advertisement -

சற்று முன்