சினிமாவில் நடிக்கும் நடிகர் நடிகைகளின் சம்பளத்தை கேட்டால், அதை வெறும் வார்த்தைகளாக கேட்கும்போதே பலருக்கும் தலை சுற்ற தான் செய்கிறது. ஒரு படத்தில் நடிக்க மிகவும் சர்வ சாதாரணமாக 100 கோடி ரூபாய் 200 கோடி ரூபாய் சம்பளம் என்கின்றனர். சாதாரண காமெடி நடிகர்களின் சம்பளம் கூட ஒரு படத்துக்கு 3 கோடி 4 கோடி ரூபாய் என்கின்றனர். சினிமாவில் பணம் கொட்டுகிறதோ இல்லையோ, நடிகர்களின் வீடுகளில் பண மழை தான் கொட்டுகிறது.
இதில் நடிகர் ரஜினிகாந்த் கமல்ஹாசன் விஜய் அஜீத்குமார் போன்றவர்களின் சம்பளம் எப்போதோ 100 கோடி ரூபாயை கடந்துவிட்டது. ஜனநாயகன் படத்தில் விஜய் சம்பளம் ரூ. 250 கோடி என்கின்றனர். அஜீத்குமார் அடுத்து நடிக்க உள்ள தனது ஏகே 64 படத்துக்கு ரூ. 180 கோடி கேட்பதாகவும் சொல்லப்படுகிறது. ரஜினிகாந்த் கூலி படத்துக்கு ரூ. 120 கோடி வாங்குவதாகவும், கமல்ஹாசன் விக்ரம் படத்தில் இருந்து அவரது சம்பளம் ரூ. 150 கோடி என்றும் சொல்லப்படுகிறது.
நடிகர் சூர்யா ரூ. 30 கோடியில் இருந்து ரூ. 65 கோடியாகவும், சியான் விக்ரம் ரூ. 35 கோடியில் இருந்து 60 கோடியாகவும், தனுஷ் ரூ. 35 கோடியில் இருந்து ரூ. 50 கோடியாகவும், நடிகர் சிவகார்த்திகேயன் ரூ. 40 கோடியில் இருந்து ரூ. 75 கோடியாகவும் இயக்குனர் அட்லி தனது சம்பளத்தை ரூ. 100 கோடியாகவும், நடிகர் அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ. 250 கோடி என்றும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த், இப்போது திடீரென தனது சம்பளத்தை கணிசமாக அதிகரித்து விட்டதாக ஒரு தகவல் கோலிவுட்டில் வேகமாக பரவி வருகிறது. அதாவது கூலி படத்தில் அவர் நடிக்க பேசிய சம்பளம் 120 கோடி ரூபாய் என்றும் அதில் ரூ. 50 கோடி மட்டுமே அட்வான்ஸ் பெற்று நடித்து முடித்ததாகவும் கூறப்படுகிறது.
அதே நேரத்தில் சன் பிக்சர்ஸ் போன்ற பெரிய நிறுவனத்திடம் ரஜினிகாந்த் போன்ற நடிகர்கள் அடிக்கடி சம்பளம் கேட்க மாட்டார்கள் என்றும், படம் ரிலீஸாவதற்கு முன் மொத்த பணமும் செட்டில் ஆகிவிடுவதும் வழக்கம் என்றும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் கூலி படம் பெரிய அளவில் வியாபாரமாகி வருவதால் ரஜினிகாந்த் திடீரென தன் முடிவில் மாற்றம் செய்திருக்கிறார்.
கூலி படத்துக்கு பெரிய மார்க்கெட் இருப்பதால் தமிழ்நாடு வெளிமாநிலங்கள் மற்றும் ஓவர்சீஸ் ஆடியோ என பெரிய விலை கிடைத்து வருவதால், நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் 2 படத்துக்கு தனது சம்பளத்தை ரூ. 250 கோடியாக உயர்த்தி சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் கேட்டுள்ளார். லோகேஷ் கனகராஜ் மற்றும் மல்ட்டி ஸ்டார் நடிகர்கள் நடித்த படம் என்பதால் விலை போகும் நிலையில், ரஜினி தன்னை மட்டுமே முன்னிறுத்தி அதிக சம்பளம் கேட்பதால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.





