- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகை சாய்பல்லவி குறித்து பரவிய அந்த தகவல்… ஆவேசமான அவர் தந்த பதில் - இனி...

நடிகை சாய்பல்லவி குறித்து பரவிய அந்த தகவல்… ஆவேசமான அவர் தந்த பதில் – இனி இதை சட்டப்பூர்வமாக சந்திப்பேன் எனவும் எச்சரிக்கை!

- Advertisement -

பிரேமம் என்ற மலையாள படம் மூலம் மலர் டீச்சர் என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் சாய்பல்லவி. இந்த படத்தில் நாயகனாக நிவின் பாலி நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து தமிழில் மாரி 2, என்ஜிகே உள்ளிட்ட படங்களில் நடித்த சாய்பல்லவிக்கு, அமரன் படம் மிகப்பெரிய வரவேற்பை தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெற்று தந்தது.

மறைந்த தமிழக ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் மனைவி இந்து ரெபேகா வர்கீஸ் கேரக்டரில், அமரன் படத்தில் சாய்பல்லவியின் நடிப்பு படத்தின் வெற்றிக்கு பெரிய பக்கபலமாக அமைந்தது. இந்த படத்துக்கு பின், தமிழில் பல படங்களில் நடிக்க சாய் பல்லவிக்கு வாய்ப்பு வந்த நிலையில், தனக்கான கேரக்டர்களில் மட்டுமே நடிக்க சாய்பல்லவி முடிவு செய்துள்ளார்.

- Advertisement -

நடிகை சாய்பல்லவி இப்போது இந்தியில் இராமாயணம் என்ற படத்தில் சீதையாக நடித்து வருகிறார். இந்த படத்தின் ரன்பீர் கபூர் ராமர் வேடத்தில் நடிக்கிறார். அந்த படத்தில் இருந்து சில புகைப்படங்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி வைரலாகியது.

இந்நிலையில், இராமாயணம் படத்தில் நடிகை சாய்பல்லவி சீதையாக நடிப்பதால், அவர் அசைவம் சாப்பிடுவதை விட்டுவிட்டார். சைவம் மட்டுமே சாப்பிடுகிறார். குறிப்பாக ஓட்டல்களில் அவர் சாப்பிடுவதையே தவிர்த்து விட்டார் என ஒரு மீடியாவில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இது முற்றிலும் வதந்தி என நடிகை சாய்பல்லவி தனது பதிவின் மூலம் தெரியப்படுத்தி இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து நடிகை சாய்பல்லவி அந்தப் பதிவில் கூறியிருப்பதாவது, என்னைப் பற்றி இப்படி பொய்யான தகவல்கள் அடிக்கடி வருகின்றன. அப்படி வரும்போது நான் பலமுறை கிட்டத்தட்ட எல்லா முறையும் அமைதியாக தான் இருந்திருக்கிறேன். இதை ஒரு சிலர் உள்நோக்கத்துடன் செய்கிறார்களா என்பது கடவுளுக்குதான் தெரியும்.

ஆனால் இது தொடர்கதையாகி விட்டது. இப்போதைக்கு நிற்பது போல தெரியவே இல்லை என்பதால் நான் இதற்கு பதில் அளிக்க இதுதான் சரியான நேரம் என்று நினைக்கிறேன். என் புதிய படங்கள், ரிலீஸ் அறிவிப்புகள் வரும்போது என் கேரியரில் முக்கியமான நேரங்களில் இப்படிப்பட்ட வதந்திகள் வந்து விடுகின்றன. இதுபோல பொய்யான செய்திகள், கிசுகிசுக்கள் இனிமேல் வந்தால் அதை நான் சட்டபடியாக சந்திப்பேன் என்று நடிகை சாய் பல்லவி கோபமாக தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சற்று முன்