- Advertisement -
Homeபொழுதுபோக்கு96 படத்தின் 2ம் பாகத்தில் அந்த விஷயத்தை கண்டிப்பா எதிர்பார்க்காதீங்க, டைரக்டர் சொன்ன தகவலை கேட்டு...

96 படத்தின் 2ம் பாகத்தில் அந்த விஷயத்தை கண்டிப்பா எதிர்பார்க்காதீங்க, டைரக்டர் சொன்ன தகவலை கேட்டு ஏமாந்து போன ரசிகர்கள் – என்னப்பு இப்படி சொல்லிட்டீங்க?

- Advertisement -

நடிகர் விஜய் சேதுபதி, நடிகை திரிஷா நடிப்பில் உருவான படம் 96. இயக்குனர் பிரேம்குமார் டைரக்ட் செய்த இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. பள்ளி பருவ காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படத்தில் விஜய் சேதுபதி, முரட்டு சிங்கிளாகவும் பள்ளி பருவ காதலியின் நினைவுகளில் வாழ்பவராகவும் நடித்திருந்தார்.

விஜய் சேதுபதி, திரிஷா இருவரது பள்ளி பருவ காதலில் கெளரி கிஷன் திரிஷா கேரக்டரிலும், எம்எஸ் பாஸ்கர் மகன், இளம் வயது விஜய் சேதுபதி கேரக்டரிலும் நடித்திருந்தார். இந்த படத்தில் தேவதர்ஷினி முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். அவரது மகள், இளம் வயது பள்ளி மாணவி கேரக்டரில் நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

திரிஷா இந்த படத்தில் ஜானு கேரக்டரிலும், விஜய் சேதுபதி ராம் கேரக்டரிலும் நடித்திருந்தனர் என்பதை விட வாழ்ந்திருந்தனர் என்றே சொல்ல வேண்டும். இந்த படம் பார்த்த அனைவருமே தங்களது பள்ளி பருவ வாழ்க்கையை மீண்டும் ஒருமுறை பிளாஷ்பேக் போல பார்த்தது போலவே இருந்தது, படத்தின் வெற்றிக்கு மிகவும் பக்கபலமாக அமைந்தது.

இதையடுத்து, 96 படத்தின் இயக்குனர் பிரேம்குமார் இப்போது மெய்யழகன் என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தை சூர்யாவின் 2டி படத்தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. கார்த்தி நாயகனாகவும், அரவிந்த்சாமி முக்கிய கேரக்டரிலும் நடித்துள்ள இந்த படம், நாளை வெளியாகிறது. இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு கிடைத்து வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் 96, மெய்யழகன் படங்களை இயக்கிய பிரேம்குமார், அடுத்து 96 படத்தின் 2ம் பாகத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். இந்த 2ம் பாகத்திலும் விஜய் சேதுபதி, திரிஷா இருவரும் தொடர்ந்து நடிக்க உள்ளனர். அவர்களது கால்ஷீட் கிடைத்த பிறகு, படப்பிடிப்பை துவங்க இயக்குனர் திட்டமிட்டுள்ளார்.

சமீபத்தில் 96 படத்தின் 2ம் பாகம் குறித்து பேசிய இயக்குனர் பிரேம்குமார், 96 படம் முழுக்க முழுக்க காதலை மையப்படுத்திய படமாக உருவானது. ஆனால் 96 படத்தின் 2ம் பாகம், காதல் கதையாக இல்லாமல் குடும்ப உறவுகளை, உணர்வுகளை மையமாக கொண்ட படமாக இருக்கும். குடும்ப பிரச்னைகளை சொல்லும் ஒரு படமாக அது இருக்கும், என்று கூறியிருக்கிறார். 96 படத்தின் 2ம் பாகத்தில் காதலே இருக்காது என்று சொல்லியிருப்பது, ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

சற்று முன்