தமிழ் சினிமாவில் டாப் ஸ்டார் நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். தளபதி என ரசிகர்களால் கொண்டாடப்படும் விஜய் படத்தில் நடிக்க பல நடிகர்கள், நடிகைகள் விரும்புகின்றனர். ஏனென்றால் விஜய் மக்கள் விரும்பும் நடிகராக இருக்கிறார். அவருக்கு என தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர்.
அதே போல் ரஜினி, கமல், அஜீத்குமார் படங்களில் நடிப்பதும் பலரது வாழ்நாள் கனவாக இருக்கிறது. அதனால் சம்பளமே இல்லாவிட்டால், சில காட்சிகளில் மட்டுமாவது எங்களை நடிக்க வையுங்கள் என இயக்குனர்கள், தயாரிப்பாளர்களிடம் பலரும் கோரிக்கை விடுப்பதுதான் வழக்கம். உதாரணமாக கீர்த்தி சுரேஷ், அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடிக்க, பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை கூட மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்த தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படம் வெளியானது. படத்துக்கு ரசிகர்கள் அமோக ஆதரவு தந்துவரும் நிலையில் இதுவரை ரூ. 430 கோடி வரை உலகம் முழுவதும் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
இந்த படத்தில் மட்ட என்ற பாடலுக்கு நடிகை திரிஷா, மகன் கேரக்டரில் நடித்திருந்த இளைய தளபதி விஜயுடன் நடனமாடியிருந்தார். ஆனால் திரிஷாவுக்கு பாடல் இல்லாமல், விஜய் மட்டுமே பாடுவது போல் அந்த பாடல் காட்சி இருந்தது ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றம் தந்தது. எனினும் கில்லி படத்தில் வரும் அப்படி போடு பாடல் அளவுக்கு இந்த பாடல் ஹிட் ஆகவில்லை.
ஆனால் இந்த பாடலில் முதலில் நடிக்க இயக்குனர் வெங்கட்பிரபு கமிட் செய்தது. தெலுங்கு நடிகை ஸ்ரீ லீலா என்பவரைதான். தெலுங்கில் பிரபலமாகி வரும் அவர், இன்னும் தமிழ் சினிமாவில் அறிமுகமாகவில்லை. இதற்கிடையே விஜயுடன் தி கோட் படத்தில் மட்ட பாட்டுக்கு குத்தாட்டம் போட அழைத்த போது வர மறுத்துவிட்டார்.
தமிழில் கதாநாயகியாக தான் அறிமுகமாக விரும்புகிறேன். அதனால் விஜயுடன் என்றாலும் ஒரு பாட்டுக்கு ஆட மாட்டேன் என்று நோ சொல்லி விட்டார். ஆனால் இப்போது இசையமைப்பாளர் அனிருத் இசை ஆல்பம் ஒன்றில் ஒரு பாட்டுக்கு அனிருத் உடன் நடனம் ஆடியிருக்கிறார் ஸ்ரீ லீலா. தளபதி கூட ஆட மறுத்துவிட்டு, அனிருத் உடன் இசை ஆல்பத்தில் ஆடியிருக்கிறாரே என ஆச்சரியப்பட்டு கேள்வி எழுப்பி வருகின்றனர்.





