- Advertisement -
Homeபொழுதுபோக்குமெய்யழகன் படத்தின் முதல் நாள் வசூல், அரவிந்த்சாமி வாங்கிய சம்பளம் இரண்டும் ஒண்ணுதானாமே? உண்மையாவா சொல்றீங்க...

மெய்யழகன் படத்தின் முதல் நாள் வசூல், அரவிந்த்சாமி வாங்கிய சம்பளம் இரண்டும் ஒண்ணுதானாமே? உண்மையாவா சொல்றீங்க என ஆச்சரியப்படும் ரசிகர்கள்!

- Advertisement -

நடிகர்கள் கார்த்தி, அரவிந்த் சாமி இணைந்து நடித்துள்ள படம் மெய்யழகன். 96 படத்தின் இயக்குனர் பிரேம்குமார் இயக்கிய இந்த படத்துக்கு, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த படத்தை கார்த்தியின் அண்ணன் நடிகர் சூர்யாவின் 2 டி நிறுவனம்தான் தயாரித்துள்ளது.

நடிகர் கார்த்தி, இயக்குனர் அமீர் இயக்கத்தில் பருத்திவீரன் படத்தில் அறிமுகமானார், தொடர்ந்து கைதி படம் கார்த்திக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. கொம்பன், கடைக்குட்டி சிங்கம், சர்தார், அழகு ராஜா, அலெக்ஸ் பாண்டியன், சிறுத்தை உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை கார்த்தி கொடுத்தார்.

- Advertisement -

ஆனால் கார்த்தி நடிப்பில் வெளியான 25வது படம், மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. குக்கூ, ஜோக்கர் போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய ராஜூ முருகன் இயக்கிய இந்த படம், அவருக்கும் கார்த்திக்கும் மிகப்பெரிய தோல்வி படமாக சுறா, இந்தியன் 2 வரிசையில் அமைந்து ரசிகர்களை கதற விட்டது.

இதையடுத்து 96 படத்தின் இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் உருவான மெய்யழகன் படத்தில் நடிகர் கார்த்தி ஹீரோவாகவும், முக்கிய கேரக்டரில் அரவிந்த் சாமியும் நடித்து அந்த படம் நேற்று வெளியானது. இந்த படத்தில் சண்டை காட்சிகளே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மெய்யழகன் படத்தில் நடிகர்கள் கார்த்தி, அரவிந்த் சாமி ஆகியோருடன் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண், தேவதர்ஷினி உள்ளிட்டோரும் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கின்றனர். பிரிந்து போன உறவுகளின் உணர்வுகளை பிரதிபலிக்கும் ஒரு குடும்ப சித்திரமாக இந்த படம் ரசிகர்களின் மனங்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

நேற்று உலகம் முழுவதும் வெளியான மெய்யழகன் படம், முதல் நாள் வசூலில் ரூ. 5 கோடியை கடந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே போல் இந்த படத்தில் நடிப்பதற்காக நடிகர் அரவிந்த் சாமி பெற்ற சம்பளமும் ரூ. 5 கோடிதான் என்றும் கூறப்படுகிறது. முதல் நாள் சம்பளமும், நடிகர் அரவிந்த் சாமியின் சம்பளமும் ஒன்றுதான் என்ற தகவல் வெளியாகி ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

சற்று முன்