- Advertisement -
Homeபொழுதுபோக்குராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லே… பாணிக்கு மாறிய நடிகர் அஜீத்குமார், நொந்து...

ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லே… பாணிக்கு மாறிய நடிகர் அஜீத்குமார், நொந்து போன தயாரிப்பாளர்கள் – பலத்த ஏமாற்றத்தில் ரசிகர்கள்

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜீத்குமார், விஜய் என 4 டாப் ஸ்டார் நடிகர்களை தமிழ் சினிமா வெகுவாக நம்பியிருக்கிறது. ஏனெனில் இவர்கள் மட்டுமே தோல்வி படங்களை தந்தாலும், தயாரிப்பாளர்களுக்கு லாபம் தரும் நட்சத்திரங்களாக இருந்து வருகின்றனர்.

இந்த சூழலில், நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை துவங்கி, அரசியலுக்குள் நுழைந்து விட்டார். தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தை தொடர்ந்து, தனது 69வது படத்தில் எச் வினோத் இயக்கத்தில் அடுத்து நடிக்க இருக்கிறார். இதுதான் அவரது கடைசி படம் என்று ஏற்கனவே அவர் திட்டவட்டமாக அறிவித்து விட்டார்.

- Advertisement -

விஜய் அரசியலுக்கு சென்றால், அவரது இடத்துக்கு விஜய்க்கு போட்டியாளராக கருதப்படும் அஜீத்குமார் வந்துவிடுவார் என்றும், ஆண்டுக்கு 2 முதல் 3 படங்களில் அவர் நடிப்பார் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், நடிகர் அஜீத்குமார் நடிப்பில் ஆர்வம் காட்டாமல் அடுத்து கார் பந்தயத்தில் கலந்துக்கொள்ள ஆர்வம் காட்டி வருகிறார்.

சினிமாவில் நடிக்க வந்த ஆரம்பகாலத்தில் பைக் ரேஸ் ஒன்றில் கலந்துக்கொண்டு பயங்கர விபத்தில் சிக்கிய நடிகர் அஜீத்குமாருக்கு முதுகு தண்டவடத்தில் 32 அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளது. அதன்காரணமாக சில முக்கியமான படங்களில் அவர் நடிக்க முடியாமல் போனது. பல படங்களில் அவர் முதுகுதண்டுவட பிரச்னையுடன் கடுமையான வலியுடன் சிரமத்துடன் நடித்து தந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஆனால் இப்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக உயர்ந்த நிலையிலும், இன்னும் நடிகர் அஜீத்குமாருக்கு பைக் ரேஸ், கார் ரேஸ் போன்ற வாகன பந்தயங்களில் ஆர்வம் கூடியிருக்கிறதே தவிர, சிறிதும் குறையவில்லை. தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் விட்டுச் சென்ற இடத்தை பிடிக்க மனமின்றி, அவர் கார் ரேஸ் பயிற்சியில் சமீபத்தில் ஈடுபட்டுள்ள புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லே என்று ரஜினி பாடிய பாடல் வரிகளை போல, விஜய் சினிமாவில் நடித்தால் என்ன, அரசியலுக்கு போனால் என்ன, நான் வழக்கம்போல என் விருப்பமான விஷயங்களில்தான் ஆர்வம் காட்டுவேன் என்ற பாணியில் அஜீத்குமார் செயல்பட்டு வருகிறார். இதனால் அவரை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்களும், அவரது ரசிகர்களும் பலத்த ஏமாற்றத்தில் புலம்பி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்