- Advertisement -
Homeபொழுதுபோக்கு30 வயசுல கல்யாணம் செஞ்சுக்கலாமுன்னு இருந்தேன், ஆனா இப்போ… - காவாலா நடன நாயகி...

30 வயசுல கல்யாணம் செஞ்சுக்கலாமுன்னு இருந்தேன், ஆனா இப்போ… – காவாலா நடன நாயகி தமன்னா என்ன இப்படி சொல்றாங்க?

- Advertisement -

நடிகை தமன்னா, கல்லூரி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் இந்த படத்தில் சோபனா என்ற கேரக்டரில் அவர் நடித்திருந்தார். முதல் படத்திலேயே அவரது யதார்த்த நடிப்பு ரசிகர்களை மிகவும் கவர்ந்துவிட்டது.

அதைத் தொடர்ந்து சுறா, அலெக்ஸ் பாண்டியன், பையா, தோழா, வீரம், அயன், படிக்காதவன், தர்மதுரை, பாகுபலி உள்ளிட்ட படங்களில் விஜய், அஜீத், தனுஷ். கார்த்தி, சூர்யா, விஜய் சேதுபதி, பிரபாஸ் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நடித்து முக்கிய கதாநாயகியாக மாறினார்.

- Advertisement -

தமிழில் மட்டுமின்றி தெலுங்கில் நிறைய படங்களில் நடித்த தமன்னா ஒரு கட்டத்தில் பாலிவுட்டுக்கு சென்றார். இந்தி படங்களில் நடித்து அங்கும் பிரபலமானார். ஆனால் அதுவரை எந்த நடிகரோடும் கிசுகிசுக்கப்படாத அவர், இந்தியில் வெப் சீரிஸ் ஒன்றில் நடித்த விஜய் வர்மாவுடன் அதிக நெருக்கம் ஏற்பட்டது.

அந்த வெப்சீரிஸ்சில் விஜய் வர்மாவுடன் உதட்டு முத்தக்காட்சிகளில் தாராளமாக நடித்த தமன்னா, பின் வெளியிடங்களுக்கு அவருடன் டேட்டிங் சென்று வருகிறார். சினிமா சார்ந்த நிகழ்ச்சிகளுக்கும் அவருடன்தான் வருகிறார். இப்போது சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புறநானூறு படத்தில் விஜய் வர்மா நடிக்கவும் ஏற்பாடு செய்துள்ளார். சமீபத்தில் ஜெயிலர் படத்தில், தமன்னா காவாலா பாடலுக்கு கவர்ச்சி நடனமாடி ரசிகர்களை சொக்க வைத்தார்.

- Advertisement -

இந்நிலையில் தனது திருமணம் குறித்து நடிகை தமன்னா கூறியிருப்பதாவது, சினிமாவில் நடிக்க வந்த புதிதில் 10 ஆண்டுகள் மட்டும் நடித்துவிட்டு, 30 வயதில் திருமணம் செய்துக்கொள்ளலாம் என திட்டமிட்டு இருந்தேன். இப்போது 30 வயதுக்கு பிறகும் நடித்துக்கொண்டே இருக்கிறேன். தொடர்ந்து படவாய்ப்புகள், வெப்சீரிஸ் வாய்ப்புகள் வந்துக்கொண்டே இருக்கின்றன. அதனால் நடிப்பை விட முடியவில்லை.

திருமணம் செய்துக்கொள்ள சில முக்கிய பொறுப்புகள் இருக்கின்றன. அதற்கு நான் தயாராகி விட்டதாக தெரியும்போது நிச்சயம் திருமணம் செய்துக்கொள்வேன். அதனால் எப்போது வேண்டுமானாலும் என் திருமணம் நடக்கும். அதற்கான கால நேரம், விரைவில் நெருங்கிவரும் என்று நினைக்கிறேன், என்று கூறியிருக்கிறார் தமன்னா.

- Advertisement -

சற்று முன்