- Advertisement -
Homeபொழுதுபோக்குபகலில் கேரளா, இரவில் தமிழ்நாடு - மாறி மாறி விமானத்தில் பறந்த இயக்குனர் கௌதம் மேனன்...

பகலில் கேரளா, இரவில் தமிழ்நாடு – மாறி மாறி விமானத்தில் பறந்த இயக்குனர் கௌதம் மேனன் – என்னங்க ஆச்சு இவருக்கு? குழப்பத்தில் ரசிகர்கள்

- Advertisement -

தமிழ் சினிமாவில் மிகவும் கவனிக்கப்படும் இயக்குனர்களில் ஒருவர் கௌதம் மேனன். மிக நல்ல படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தந்திருக்கிறார். காக்க காக்க, வாரணம் ஆயிரம், விண்ணைத் தாண்டி வருவாயா மின்னலே, வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துச்சரம், என்னை அறிந்தால், அச்சம் என்பது மடமையடா, வெந்து தணிந்தது காடு போன்ற அவரது காதல் கலந்த ஆக்‌ஷன் படங்கள் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்திருக்கின்றன.

காதல், ஆக்‌ஷன் படங்களை இயக்குவது மட்டுமின்றி பல படங்களில் கெளதம் மேனன் நடிக்கவும் செய்திருக்கிறார். விடுதலை, விடுதலை 2, லியோ, ஓ மை கடவுளே, கண்ணும் கண்ணும், ரத்னம் என பல படங்களில் கௌதம் மேனனின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. எந்த படத்திலும் அவரது அழுத்தமான நடிப்பு ரசிகர்களை அசத்தி விடுகிறது.

- Advertisement -

ஒரு சிறந்த படைப்பாளியாக படங்களை இயக்கி தரும் கௌதம் மேனன், நடிகராக மாறியதால் அவரது இயக்கத்தில் உருவாக வேண்டிய படங்களை மிஸ் செய்வதாக ரசிகர்கள் மத்தியில் விமர்சனம் எழுந்தது. நடிக்க பல கெளதம் மேனன் கிடைக்கலாம். ஆனால் இயக்குனராக கௌதம் மேனன் ஒருவராக தான் இருக்க முடியும் என்றும் ரசிகர்கள் கூறினர்.

இதையடுத்து இனிமேல் நடிக்க போவதில்லை, இனி பழையபடி படங்களை இயக்குவதில் முழு கவனமும் செலுத்தப் போகிறேன் என்ற முடிவுக்கு கௌதம் மேனன் வந்துவிட்டார். அத்துடன் நடிகராக இருந்த போது சில படங்களை அவர் தயாரிக்கவும் செய்ததால், கடன் பிரச்னைகளிலும் சிக்கிக் கொண்டார். துருவ நட்சத்திரம் என்ற அவரது படம் இந்த கடன் பிரச்னையில் சிக்கி இன்னும் ரிலீஸ் ஆகாமல் முடங்கி போயுள்ளது.

- Advertisement -

இப்போது மலையாளத்தில், நடிகர் மம்முட்டியின் தயாரிப்பு நிறுவனம் மம்முட்டி கம்பெனி தயாரிக்கும் ஒரு படத்தை இயக்குனர் கௌதம் மேனன் டைரக்ட் செய்கிறார். அந்த படத்தின் ஷூட்டிங் கேரளாவில் நடந்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பில் கெளதம் மேனன் பங்கேற்று வந்த நிலையில் திடீரென அவருக்கு விளம்பர படம் ஒன்று இயக்க வாய்ப்பு வந்தது. அதுவும் பெரிய சம்பளமாக இருந்துள்ளது.

இதையடுத்து கேரளாவில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மம்முட்டி படப்பிடிப்பில் பணிசெய்யும் கௌதம் மேனன், அதன்பிறகு கேரளாவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்து இரவு 8 மணி முதல், இரவு முழுவதும் விளம்பர படம் ஷூட்டிங் நடத்தி விட்டு, பிறகு காலையில் விமானத்தில் கேரளா சென்று, அங்கு மம்முட்டி படப்பிடிப்பை தொடர்ந்துள்ளார். இப்படி 3 நாட்கள் கேரளாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் மாறி மாறி பறந்து விளம்பர படத்தை இயக்கி முடித்துள்ளார் கெளதம் மேனன் என்பது கோலிவுட் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்