நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெய் பீம் ஞானவேல் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே தனது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகும் லால் சலாம் படத்தில் அவர் நடித்து முடித்திருக்கிறார். இதில் மொய்தீன் கான் எனும் கதாபாத்திரத்தில் ரஜினி வருகிறார். கிரிக்கெட் மற்றும் மத அரசியலை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த திரைப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்தத் திரைப்படம் வரும் பொங்கல் அன்று வெளியாகிறது. இதற்கான இசை வெளியீட்டு விழா வரும் 21ஆம் தேதி சாய்ராம் கல்லூரி வளாகத்தில் நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பங்கேற்கிறார். இதன் பிறகு மூன்று நாட்கள் கழித்து மீண்டும் ஜெய் பீம் ஞானவேல் படத்தில் அவர் நடிக்கிறார்.
இந்தத் திரைப்படம் என்கவுண்டரை மையமாக வைத்து எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதேபோல் ரஜினி ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக நடிக்கிறாராம். இதன் சூட்டிங் திருவனந்தபுரத்தில் தொடங்கி திருநெல்வேலி மும்பை சென்னை ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. இந்த திரைப்படத்தில் அமிதாப் பச்சன், ராணா, ஃபகத் பாஸில், மஞ்சு வாரியர் துஷாரா விஜயன், ரித்திகா சிங் ஆகியோர் நடிக்கின்றனர்.
ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த திரைப்படத்தின் டைட்டில் வெளியானது. அதன்படி இதற்கு வேட்டையன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதன் டீசரில் ரஜினி பேசிய குறி வச்சா இறை விழனும் டயலாக் நல்ல ரீச் ஆகியது. கிட்டத்தட்ட சூட்டிங் இன்னும் ஒரு மாதத்தில் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் உடன் ரஜினிகாந்த் இணைந்து பணியாற்றுகிறார்.
இந்த திரைப்படம் எல் சி யு வில் வராது என்றும் அவர் கூறியிருந்தார். தற்போது லோகேஷ் கனகராஜ் ரஜினி படத்துக்கான திரைக்கதை எழுதி வரும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இதன் சூட்டின் அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இதற்கு இசையமைக்கிறார்.
இதில் ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடிப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. தற்போது தெலுங்கு கன்னடம் மலையாளம் திரையுலகில் இருந்தும் இந்த படத்தில் சிலர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது ராம்சரண், மம்முட்டி, சிச்சா சுதீப் ஆகியோரை நடிக்க வைக்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளாராம். இதற்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருவதாக தகவல் கசிந்துள்ளது. விரைவில் இந்த படத்தில் நடிப்பவர்கள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.





