- Advertisement -
Homeபொழுதுபோக்குஇன்னும் சில ஆண்டுகள் பொறுமையா இருங்க… கண்டிப்பா அது நடக்கும் - விஜய் ரசிகர்களுக்கு ஊக்கம்...

இன்னும் சில ஆண்டுகள் பொறுமையா இருங்க… கண்டிப்பா அது நடக்கும் – விஜய் ரசிகர்களுக்கு ஊக்கம் தரும் முக்கிய தகவலை சொன்ன பிரபலம்!

- Advertisement -

நடிகர் விஜய் இப்போது ஜனநாயகன் என்ற படத்தில் நடித்து வருகிறார். மிக விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் என்று சொல்லப்படுகிறது. கடந்த வாரத்தில் நடிகர் விஜய் இந்த படத்தின் படப்பிடிப்புக்காக கொடைக்கானல் சென்று அங்குள்ள தாண்டிக்குடி என்ற மலைகிராமத்தில் தங்கி 3 நாட்கள் ஷூட்டிங்கில் கலந்துக்கொண்டார்.

தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராக உள்ள நடிகர் விஜய், ஜனநாயகன் படத்துடன் நடிப்புக்கு குட்பை சொல்லி விட்டு சினிமாவை விட்டு முற்றிலும் விலகுவதாக ஏற்கனவே அறிவித்து விட்டார். அதனால் விஜய் நடிக்கும் கடைசி படம் இதுதான். அவரது 69வது படம்தான் அவரது சினிமா வாழ்வின் முற்றுப்புள்ளியாக இருக்கிறது. இது விஜய் ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றம் தருகிறது.

- Advertisement -

நடிகர் விஜய்க்கு ஜேசன் சஞ்சய் என்ற மகன் இருக்கிறார். ஆனால் அவர் சினிமாவில் நடிக்க ஆசைப்படாமல் இயக்குனராக களத்தில் இறங்கியிருக்கிறார். சிறுவயதில் இருந்தே குறும்படங்களை இயக்குவதில் ஆர்வம் காட்டிய அவர், வெளிநாடு சென்று அங்கு சில ஆண்டுகள் தங்கி டைரக்‌ஷன் படிப்புகளை முடித்துவிட்டு திரும்பியிருக்கிறார்.

நடிகர் விஜயின் அப்பா எஸ்ஏ சந்திரசேகர் மிகப்பெரிய இயக்குனர் என்ற முறையில், தாத்தாவை போலவே பேரன் ஜேசன் சஞ்சயும் இயக்குனராக பெரிய வெற்றியை பெறும் கனவுடன் தமிழ் சினிமாவுக்குள் வந்திருக்கிறார். இப்போது லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பில் சந்தீப் கிஷன் நடிக்கும் ஒரு படத்தை இயக்கி வருகிறார்.

- Advertisement -

இதுகுறித்து மூத்த சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு ஜெ பிஸ்மி வீடியோ ஒன்றில் கூறியிருப்பதாவது, நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் திரைப்பட இயக்குனராக களம் இறங்கி இருக்கிறார். அவரது இயக்கும் முதல் படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்து வருகிறார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் கிளிம்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

நடிகர் விஜய் சினிமாவை விட்டு விலகி அரசியலுக்கு சென்றுவிட்டார். ஜனநாயகன் படத்துக்கு பிறகு அவர் நடிப்பதில்லை என்ற முடிவில் இருக்கிறார். அதே நேரத்தில் அவரது மகன் ஜேசன் சஞ்சய் இப்போது இயக்குனராக இருந்தாலும் இன்னும் சில ஆண்டுகளில் நிச்சயமாக அவர் நடிக்க வந்து விடுவார். நிச்சயமாக ஒரு ஹீரோவாக ஜேசன் சஞ்சய் சினிமாவில் நடிப்பார் என்று வலைப்பேச்சு ஜெ பிஸ்மி அந்த வீடியோவில் கூறியிருக்கிறார். இது தளபதி ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

- Advertisement -

சற்று முன்