தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு ஹீரோயின்கள் மிளிர்ந்து கொண்டே இருப்பார்கள். அப்படி 90களில் இறுதியிலும், 2000 ஆண்டுகளிலும் கோலிவுட்டில் கொடிகட்டி பறந்தவர் நடிகர் சிம்ரன்.
நேருக்கு நேர் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அவர், படிப்படியாக உயர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். அவர் புதிய உச்சத்தை எட்ட, மிக முக்கியமான திரைப்படமாக அமைந்தது துள்ளாத மனமும் துள்ளும். காதலையே வித்தியாசமான பரிணாமத்தில் காட்டிய அந்த திரைப்படம், மிகப்பெரிய வெற்றியை ருசித்தது.
சொல்லப்போனால் விஜய்க்கும் இந்த திரைப்படம் அடுத்த தளத்திற்கு அழைத்துச் சென்றது. இது ஒரு பக்கம் இருக்க, அடுத்ததாக வாலி திரைப்படத்தில் நடித்து பலரையும் கிறங்கடித்தார் சிம்ரன். தனது தம்பி மனைவியின் மேல் ஆசைப்படும் அண்ணனின் கதை என்ற ஒற்றை வரி தான் வாலி படத்தின் கதைக்களம்.
ஆனால் அதனை எந்தவித நெருடலும் இல்லாமல் சொல்ல வந்ததை மிகச் சரியாக சொல்லி பெயர் பெற்றது வாலி திரைப்படம். இதிலும் சிம்ரனின் நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இப்படி நடிப்பின் உச்சத்தில் இருக்கும்போதே, 2003 ஆம் ஆண்டு தீபக் என்பவரை திருமணம் செய்தார் சிம்ரன்.
பிறகு மிகவும் தேர்ந்தெடுத்த கதைகளையே அவர் நடிக்க ஆரம்பித்தார். இதற்கு உதாரணமாக 2008 ஆம் ஆண்டு வெளியான வாரணம் ஆயிரம் திரைப்படத்தை கூறலாம். அதில் சூர்யாவுக்கு அம்மாவாக நடிக்க ஒப்புக்கொண்டார் சிம்ரன். அதேசமயம், தனது நடிப்பிலும் எந்த ஒரு வித்தியாசத்தையும் காமிக்காமல் பழைய சிம்ரன் ஆகவே அவர் வளர்ந்தார்.
பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு ரஜினிகாந்தின் பேட்ட திரைப்படத்தில் சிம்ரன் நடித்திருந்தார். இப்படியான சொல்லி தான் தற்போது சிம்ரன் புதிய படத்தில் புக்காகியுள்ளார். இதில் நடிப்பது வேறு யாருமில்லை இயக்குனரும் நடிகருமான சசிகுமார் தான். குடும்பத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த திரைப்படத்தில் யோகி பாபு மற்றும் ரமேஷ் திலக் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். குட் நைட் திரைப்படத்தை தயாரித்த நிறுவனமே இதனையும் எடுக்கிறது. அபிசன் ஜீவித் என்பவர் இந்த திரைப்படத்தை இயக்குகிறார். அடுத்த மாதம் இதன் சூட்டிங் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.





