இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கிய கல்லூரி படத்தில் ஷோபனா என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்களிடம் அறிமுகமானவர் தமன்னா. கல்லூரி மாணவியாக இந்த படத்தில் அவரது நடிப்பு யதார்த்தமாகவும், அதே நேரத்தில் அழுத்தமான நடிப்பையும் வெளிப்படுத்தி இருந்தார். இந்த படம் நல்ல வரவேற்பை தமன்னாவுக்கு பெற்றுத் தந்தது.
தொடர்ந்து வியாபாரி படிக்காதவன் பையா தோழா சுறா வீரம் கண்டேன் காதலை உள்ளிட்ட பல படங்களில் தமன்னா நாயகியாக நடித்து முன்னணி நடிகையாக மாறினார். ஒரு கட்டத்தில் தெலுங்கில் அதிக படங்களில் நடித்த தமன்னா, அதன்பிறகு இந்தியில் ஆர்வம் காட்டினார். இந்தி படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் நடித்தார்.
தமிழில் அதிகம் கவர்ச்சியில்லாமல் நடித்த தமன்னா, தெலுங்கில் தாராளமாக கவர்ச்சி காட்டி நடித்தார். அதன் பிறகு பாலிவுட்டில் இந்தி நாயகிகளுக்கு சவால் விடும் அளவுக்கு படங்கள் மற்றும் வெப் சிரீஸ்களில் தாராளமாக கவர்ச்சி காட்டினார், லிப்லாக் காட்சிகளிலும் படுக்கையறை காட்சிகளிலும் தமன்னா அதிக நெருக்கம் காட்டி நடித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் டைரக்ட் செய்த ஜெயிலர் படத்தில், காவலய்யா என்ற பாடலுக்கு நடிகை தமன்னா குத்தாட்டம் போட்டார். இந்த பாட்டு பெரிய அளவில் வைரலாகி அவருக்கு பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது. அதன்பிறகு இதுபோன்ற ஒரு பாடல் காட்சியில் நடிக்க ரூ. 1.5 கோடி வரை தமன்னா பெறுவதாக கூறப்பட்டது.
கடந்த 2023ம் ஆண்டில் வெளியான இந்தி வெப் சீரிஸ் தி லஸ்ட் ஸ்டோரீஸ் 2ல் தமன்னா, நடிகர் விஜய் வர்மாவுடன் நடித்தார். அதில் முத்தக்காட்சிகள், படுக்கையறை காட்சிகளும் இருவரும் நெருக்கமாக நடித்த நிலையில் அவர்களுக்குள் காதல் ஏற்பட்டது. அதன்பிறகு பல இடங்களில் இருவரும் ஒன்றாக காணப்பட்டனர். அடிக்கடி விஜய் வர்மா, தமன்னா டேட்டிங் செல்வதாகவும் தகவல்கள் வெளியாகின.
இருவரும் பல இடங்களுக்கு ஒன்றாக சுற்றித் திரிந்த நிலையில் இப்போது அவர்கள் இருவரும் பிரிந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. சோஷியல் மீடியாவில் அவர்கள் இருவரும் ஒன்றாக இருந்த புகைப்படங்கள், வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும், இருவரது பிரிவும் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இருவரும் விரைவில் திருமணம் செய்துக்கொள்வதாக தகவல் பரவிய நிலையில், இப்போது அவர்களது பிரிவு குறித்த தகவல் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.





