- Advertisement -
Homeபொழுதுபோக்குதனுஷ் இயக்கத்தில் உருவான 3வது படம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் - படத்தில்...

தனுஷ் இயக்கத்தில் உருவான 3வது படம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் – படத்தில் முதலில் நடிக்க வேண்டியது யார் தெரியுமா? இடையில் தனுஷின் அக்கா மகன் நுழைந்தது எப்படி? – ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்!

- Advertisement -

நடிகர் தனுஷ் நடிகராக மட்டுமின்றி பல பரிமாணங்களை சினிமா துறையில் வெளிப்படுத்தி வருகிறார். பாடகர், நடனக்கலைஞர், தயாரிப்பாளர், இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், பாடல் ஆசிரியர் என பலவிதங்களில் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். ஆனால் ஒவ்வொன்றிலும் அவர் வெற்றி பெறுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடிகர் தனுஷ் முதலில் இயக்கிய படம் ப பாண்டி, அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து 2வது அவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் ராயன். இது அவரது நடிப்பில் வெளியான 50வது படம். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. 155 கோடி ரூபாய்க்கு மேல் வசூலில் சாதனை புரிந்தது.

- Advertisement -

ராயன் படத்தை இயக்கும்போதே நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தையும் தனுஷ் இயக்க துவங்கி, அந்த படத்தையும் முடித்து விட்டார். இப்போது தனுஷ் இயக்கத்தில் 52வது படமாக அவர் நடிக்கும் இட்லிக்கடை என்ற படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சத்யராஜ், ராஜ்கிரண் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர். தேனி மாவட்டத்தில் இதன் ஷூட்டிங் நடந்து வருகிறது.

இந்த சூழலில் நீக் என சுருக்கமாக அழைக்கப்படும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற தனுஷ் இயக்கத்தில் உருவான 3வது படம் குறித்த சில தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் தனுஷின் சொந்த சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக நடிக்கிறார். விஸ்வாசம், என்னை அறிந்தால் படங்களில் அஜீத்குமாருக்கு மகளாக நடித்த அனிகா சுரேந்திரன், கதாநாயகியாக நடிக்கிறார்.

- Advertisement -

ஆனால் இந்த படத்தின் கதையை எழுதிய போது இந்த படத்தில் தனுஷ்தான் நாயகனாக நினைக்க திட்டமிட்டுள்ளார். தாணு இந்த படத்தை தயாரிக்கவும் முடிவு செய்திருக்கிறார். ஆனால் ஒரு கட்டத்தில் தனது சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக நடிக்க வைக்க ஆசைப்பட்டுள்ளார். அதற்கு காரணம், பவிஷிடம் இருந்த திரைத்துறை ஆர்வம்தான்.

அசுரன் ஷூட்டிங் நடந்த போது, அடிக்கடி வந்து படப்பிடிப்பை கவனித்த பவிஷ், செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் என்ற படத்தி்ல் தனுஷ் நடித்த போது, அந்த படத்தில் பவிஷ் உதவி இயக்குனராக சுறுசுறுப்பாக பணி செய்திருக்கிறார். அவரது திறமை, உழைப்பு, ஆர்வம் ஆகியவற்றை கவனித்த தனுஷ், அதன் பிறகுதான் தனக்கு பதிலாக தனது அக்கா மகனை நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தில் ஹீரோவாக நடிக்க வைத்திருக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்