அஜித் நடிப்பில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு திரைப்படங்கள் ஒரே நேரத்தில் தயாராகி வருகின்றன. இதில் விடாமுயற்சி திரைப்படத்தின் சூட்டிங் முடிவடைந்த நிலையில், அதன் அடுத்த கட்ட தகவல் குறித்த எந்த ஒரு அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.
இந்தப் புறம் குட் பேட் அக்லி திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதனை எடுத்து இரண்டாவது கட்டப் படப்பிடிப்புக்காக ஸ்பெயின் நாட்டிற்குச் செல்ல படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. விடாமுயற்சியில் அஜித்திற்கு மனைவி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரிஷா இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக வருகிறார்.
இறுதியாக, மார்க் ஆண்டனி என்னும் மாபெரும் வெற்றி திரைப்படத்தை கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரன் இந்த திரைப்படத்தை இயக்கி வருகிறார். மைத்திரி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த திரைப்படம் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இது திரைப்படத்தில் அஜித்தின் லுக்கையே வேறு விதமாக காட்டி இருக்கிறார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். உடம்பெல்லாம் டாட்டூ, கலர் கலராகச் சட்டை என அஜித்தின் தோற்றமே வித்தியாசமாக இருக்கிறது.
இந்தப் படத்தில் அஜித்திற்கு பிறகு வேறு யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. அண்மையில் அர்ஜுன் தாஸ் மற்றும் நடிகர் பிரசன்னா ஆகியோர் இந்த திரைப்படத்தில் இடம்பெற்று இருப்பதாக தகவல் கசிந்தது. தற்போது இதனை நடிகர் பிரசன்னா உறுதிப்படுத்தி இருக்கிறார்.
இதுகுறித்து தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், அஜித் சார் படத்தில் நடிப்பது இறுதியில் உண்மையாகிவிட்டது. எனது நீண்ட நாள் கனவு இப்போது உண்மையாகி இருக்கிறது. மங்காத்தாவிற்கு பிறகு அஜித் சாரின் ஒவ்வொரு திரைப்படத்தின் அறிவிப்பிலும் நான் இருக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். அவரது ரசிகர்களும் நான் படத்தில் இருப்பதாக நினைத்து என்னை வாழ்த்துவார்கள். ஆனால் அது கடைசி நேரத்தில் நழுவி விடும். ஆனால் இந்த முறை அது உறுதியாகி இருக்கிறது. நான் அஜித் சாருக்கும் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் கடவுளுக்கும் இந்த முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.





