- Advertisement -
Homeபொழுதுபோக்குமுதல் முறையாக மேடை போட்டு பிரம்மாண்டமாக அரசியல் கட்சி தொடக்க விழாவை நடத்தப் போகும் விஜய்......

முதல் முறையாக மேடை போட்டு பிரம்மாண்டமாக அரசியல் கட்சி தொடக்க விழாவை நடத்தப் போகும் விஜய்… எப்போது… எந்த… இடத்தில் தெரியுமா…

- Advertisement -

நடிகர் விஜய் தற்போது கோட் படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கி இருக்கும் இந்த திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் முடிந்து விட்டன. இன்னும் ஒரே ஒரு பாடல்தான் படமாக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இந்த திரைப்படம் செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

 

- Advertisement -

இப்படியான சூழலில், கோட் திரைப்படத்திற்கு பிறகு, தான் ஏற்கனவே ஒப்புக் கொண்டிருக்கும் ஒரே ஒரு படத்தில் மட்டும் பணியாற்ற இருப்பதாக விஜய் கூறி இருக்கிறார். இதன் பிறகு முழுக்க முழுக்க தான் அரசியலிலேயே கவனம் செலுத்த போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

- Advertisement -

இது தொடர்பான அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. யாருமே எதிர்பாராத நேரத்தில், டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தின் விஜய் சார்பாக புஸ்ஸி ஆனந்த் அரசியல் கட்சியை பதிவு செய்தார். இதன்பிறகு தனது கட்சியின் பெயரை அறிவித்தார் விஜய். தமிழக வெற்றி கழகம் என இதற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.

 

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், அரசியலில் ஆழம் மட்டுமல்ல நீள அகலத்தையும் பார்த்து தான் இறங்கி இருப்பதாகவும், தனது முன்னோர்களைப் பார்த்து பல விஷயங்களை கற்று இருப்பதாகவும் கூறியிருந்தார். முக்கியமாக இந்த நாடாளுமன்ற தேர்தலில் தான் போட்டியிடவில்லை என்றும், 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதே தனது இலக்கு என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

 

இதனைத் தொடர்ந்து விஜயின் அரசியல் பார்வை என்னவாக இருக்கும் என்று கேள்விகள் எழ ஆரம்பித்தன. அவர் எந்த மாதிரியான பாதையை தேர்வு செய்வார், யாரை எதிர்த்து அரசியல் பண்ணுவார் என்று அடுத்தடுத்த கேள்விகள் என ஆரம்பித்தன. இப்படியான சூழலில், நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்களை விஜய் வழங்கியிருந்தார்.

 

அவர் எப்போது பொதுக்கூட்டத்தைக் கூட்டுவார் என்ற கேள்வி மட்டும் தொடர்ந்து எழுந்து கொண்டே இருக்கிறது. இப்படியான சூழலில் அதற்கு பதில் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது தனது ஐம்பதாவது பிறந்தநாளை, வரும் ஜூன் 22ஆம் தேதி விஜய் கொண்டாட இருக்கிறார். அன்றைய தினம், மதுரையில் பிரம்மாண்ட அரசியல் கட்சிக் கூட்டத்தை விஜய் நடத்த இருக்கிறாராம். அதில் தமிழக வெற்றி கழகம் தொடர்பாக பல்வேறு விஷயங்களை அவர் பேச இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

- Advertisement -

சற்று முன்