- Advertisement -
Homeபொழுதுபோக்குவேட்டையன் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த அமோக வரவேற்பு, அட்வான்ஸ் புக்கிங்கில் வசூலித்தது எத்தனை கோடி...

வேட்டையன் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த அமோக வரவேற்பு, அட்வான்ஸ் புக்கிங்கில் வசூலித்தது எத்தனை கோடி தெரியுமா? – சூப்பர் ஸ்டாருன்னு சும்மாவா?

- Advertisement -

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெயரை சொன்ன உடனேயே ரசிகர்கள் மத்தியில் உற்சாகம் கொப்பளிக்கும், சந்தோஷம் பீறிடும் அளவுக்கு உச்ச நடிகராக தமிழ் சினிமாவில் நடித்துக் கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் ஜெயிலர். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது, 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூலில் சாதனை புரிந்தது.

நடிகர் ரஜினிகாந்துக்கு இந்த படம் இன்னொரு பாட்ஷா என்று சொல்லும் அளவுக்கு மிகப்பெரிய ஒரு வெற்றி படமாகவும், பிளாக் பஸ்டர் மூவியாகவும் அமைந்தது. இந்த படத்தை தொடர்ந்து, தனது மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் என்ற படத்தில் நடிகர் ரஜினிகாந்த், கேமியோ ரோலில் நடித்திருந்தார்.

- Advertisement -

ஆனால் லால் சலாம் படம் சில நாட்கள் மட்டுமே திரையில் ஓடியது. இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை. படத்தை தயாரித்த லைக்கா நிறுவனத்திற்கு, லால் சலாம் மிகப்பெரிய நஷ்டத்தை கொடுத்தது. ரஜினி ரசிகர்களுக்கே இந்த படம் பிடிக்கவில்லை. பல தியேட்டர்களில் ரஜினி ரசிகர்களே படம் பார்க்க வரவில்லை என்றும் கூறப்பட்டது.

இதைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் தனது 170வது படம் வேட்டையன் படத்தில் நடித்தார். தசெ ஞானவேல் இயக்கிய இந்த படத்தில், ரஜினிகாந்த் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் போலீஸ் ஆபிஸராக நடித்திருக்கிறார். அவருக்கு மனைவியாக மஞ்சு வாரியார் நடித்திருக்கிறார். மேலும் இந்த படத்தில் கேமியோ ரோலில் பாலிவுட் சீனியர் நடிகர் அமிதாபச்சன் நடித்துள்ளார்.

- Advertisement -

வேட்டையன் படத்தில் ராணா டகுபதி, பகத் பாசில், கிஷோர், ரித்திகா சிங், அபிராமி, ரோகிணி, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நிலையில், வருகிற 10ம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று பேசியதும் ரசிகர் மத்தியில் பெரிய வரவேற்பு பெற்றது.

வருகிற 10ம் தேதி வேட்டையன் படம் ரிலீஸ் ஆகும் நிலையில், இதுவரை இந்த படத்துக்கு அட்வான்ஸ் புக்கிங் என்ற வகையில் 15 கோடி ரூபாய் வரை வசூலித்து இருப்பதாக தெரிய வந்துள்ளது. வருகிற 10ம் தேதி படம் ரிலீஸ் ஆகும் நிலையில் 10, 11, 12, 13 ஆகிய நான்கு நாட்களுக்கு ஞாயிறு வரை பெரும்பாலான தியேட்டர்களில் ஹவுஸ்புல் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பலரும் வேட்டையன் படம் பார்க்க படம் டிக்கெட் புக்கிங் பண்ண முடியாமல் ஏமாற்றத்தில் இருக்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்