- Advertisement -
Homeபொழுதுபோக்குஇன்று குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து...

இன்று குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கு, கோர்ட் எடுத்த முடிவு – அப்போ அது நிஜம்தான் போல இருக்கு!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளர், பாடகர், இயக்குனர் என பல பரிமாணங்களை தனுஷ் வெளிப்படுத்தி வருகிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன் அவரது இயக்கத்தில் வெளிவந்த ராயன் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த ஆண்டில் வெளியான படங்களில் 100 கோடி ரூபாய் வசூலை அள்ளிய படங்களில் தனுஷ் இயக்கிய ராயன் படமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து தற்போது நடிகர் தனுஷ் இட்லிக்கடை என்ற தனது 52 வது படத்தை இயக்கி வருகிறார். தேனி மாவட்டத்தில் ஷூட்டிங் நடந்து வருகிறது. அடுத்து தனுஷ் இயக்கத்தில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படம், வரும் டிசம்பர் 26ம் தேதி வெளியாக உள்ளது. மேலும் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்த குபேரா படம் ஷூட்டிங் முடிவடையும் தருவாயில் உள்ளது. அடுத்து இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார்.

- Advertisement -

இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டில் தனது மனைவி ஐஸ்வர்யாவை பிரிவதாக தனது வலைதளப் பக்கத்தில் நடிகர் தனுஷ் அறிவித்தார். அதேபோல் அவரது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் தனது கணவர் தனுஷை பிரிவதாக அறிவித்தார். இதை சினிமா வட்டாரத்தில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனெனில் இவர்கள் இருவரும் கடந்த 2004ம் ஆண்டில் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மருமகன் என்ற பெருமையுடன் இருந்த நடிகர் தனுஷ் இப்படி திடீரென அவரது மனைவியை பிரிய முன்வந்தது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தனுஷ், ஐஸ்வர்யா தம்பதிக்கு லிங்கா, யாத்ரா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். தனுஷ், ஐஸ்வர்யா இருவருமே தங்களது வலைதள பக்கங்களில் பிரிவை அறிவித்திருந்த நிலையில், கோர்ட்டில் விவாகரத்து கேட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் அவர்கள் மனு தாக்கல் செய்யாமல் இருந்ததால் விரைவில் இருவரும் இணைந்து விடுவார்கள் என்று பலரும் எதிர்பார்த்தனர்.

- Advertisement -

ஆனால் இதற்கு நேர்மாறாக கடந்த பிப்ரவரி மாதத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் ஐஸ்வர்யா, தனுஷ் இருவருமே சென்னையில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் பரஸ்பரம் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்தனர். 2004ம் ஆண்டில் நடந்த தங்களது திருமணம் செல்லாது என்று அறிவித்து ரத்து செய்யவும், அந்த மனு தாக்கலில் கூறியிருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அக்டோபர் 6ம் தேதி ( இன்று) விசாரணைக்கு நேரில் இருவரும் ஆஜராக உத்தரவிட்டார்.

இன்றுசென்னை குடும்ப நல நீதிமன்றத்தில், தனுஷ், ஐஸ்வர்யா விவகாரத்து வழக்கு விசாரணைக்கு வந்தது. ஆனால் இன்று அவர்கள் இருவருமே நேரில் வரதால் வருகிற 19ம் தேதிக்கு இந்த வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டார். சமீபமாக நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் இணைவதற்கான ஒரு சூழல் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. பிள்ளைகளின் எதிர்காலம் கருதி தங்களது விவாகரத்து முடிவை அவர்கள் மாற்றி இன்று கோர்ட்டில் அவர்கள் இருவரும் விசாரணைக்கு ஆஜராகாமல் தவிர்த்தது அதனால்தான் என்று தகவல் பரவி வருகிறது.

- Advertisement -

சற்று முன்