- Advertisement -
Homeபொழுதுபோக்குலியோவில் காட்டிய மேஜிக்கை தளபதி 69லும் தொடரப்போகும் அனிருத்... காது கொடுத்து கேட்க தயாராகும் ரசிகர்கள்......

லியோவில் காட்டிய மேஜிக்கை தளபதி 69லும் தொடரப்போகும் அனிருத்… காது கொடுத்து கேட்க தயாராகும் ரசிகர்கள்… அடுத்த சிக்ஸருக்கு ரெடி ஆகும் இசையமைப்பாளர்…

- Advertisement -

நடிகர் விஜய் தனது கடைசி திரைப்படத்திற்காக ஹெச் வினோத்துடன் இணைந்து இருக்கிறார். சதுரங்க வேட்டை தீரன் அதிகாரம் ஒன்று என இரண்டு தரமான திரைப்படங்களை கொடுத்தவர் வினோத். இந்த இரண்டு திரைப்படங்களுமே சுவாரஸ்யமான வகையில் ஆழமான கதை அம்சத்துடன் எழுதப்பட்டிருக்கும்.

இதன்பிறகு அஜித்குமார் உடன் இணைந்த வினோத், நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு என மூன்று திரைப்படங்களை இயக்கினார். இதில் வலிமை படுதோல்வியை சந்தித்தது. நேர்கொண்ட பார்வை ஓரளவு வரவேற்பு பெற்றது. துணிவு திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றியை குவித்தது.

- Advertisement -

ஆனால் இந்த மூன்று திரைப்படங்களுமே வினோத்தின் முந்தைய திரைப்படங்களைப் போல இல்லை என்று தான் கூற வேண்டும். இப்படியான சூழலில் தான், தனது கடைசி படத்தை இயக்கும் அரிதான வாய்ப்பை வினோத்திடம் கொடுத்திருக்கிறார் விஜய். இதற்குக் காரணம் வினோத் கூறிய அரசியல் சார்ந்த கதை தான் என்று கூறப்படுகிறது.

கதை தனக்கு மிகவும் பிடித்துப் போனதால் மிகவும் நம்பி இந்த பொறுப்பை வினோத்திடம் விஜய் ஒப்படைத்து இருக்கிறார். தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவில் கோலோச்சி இருக்கும் கேவிஎன் என்னும் தயாரிப்பு நிறுவனம் தான் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறது.

- Advertisement -

இந்தப் படத்திற்காக, விஜய் 250 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை. இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இவர் போக மமீதா பைஜூ விஜய்க்கு தங்கையாக நடிப்பதாக கூறப்படுகிறது. கௌதம் மேனன், பிரியா மணி, நரேன், பாபி தியோல் உள்ளிட்டோரும் இந்த திரைப்படத்தில் இருக்கின்றனர்.

இதன் படப்பிடிப்பு தற்போது சென்னையை அடுத்த பையனூர் சூட்டிங் தளத்தில் நடைபெற்று வருகிறது. அனிருத் படத்திற்கு இசையமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இதில் ஒரு பாடலை ராப் பாடகர் அசல் கோளாறு எழுதி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஏற்கனவே லியோ திரைப்படத்தில் நா ரெடி தான் பாடலில் சில வரிகளை எழுதியிருந்தார். தற்போது அவரை மீண்டும் விஜயின் கடைசி படத்திலும் இடம்பெற்று இருப்பது ரசிகர் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

சற்று முன்