விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி நேற்று முன்தினம் 6ம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கியது. துவக்கநாளில் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் 18 போட்டியாளர்களை நடிகர் மற்றும் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் விஜய் சேதுபதி அறிமுகப்படுத்தி வீட்டுக்குள் அனுப்பி வைத்தார். இதில் முதல் நபராக வீட்டுக்குள் சென்றவர் தயாரிப்பாளர் ரவீந்தர். பேட்மேன் என்று அழைக்கப்படும் அவர் சீரியல் நடிகை மகாலட்சுமியின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உடல் பருமன் அதிகமாக உள்ள ரவீந்தர், மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி, சமூக வலைதளங்களில் பரபரப்பை அப்போது ஏற்படுத்தியது. எனினும் அன்புக்கு உருவம் முக்கியமில்லை என்று இருவருமே வெளிப்படுத்தி, நல்ல தம்பதியாக அவர்கள் இணைந்து வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் முதல் ஆளாக வந்த பேட்மேன் ரவீந்தர், பிக் பாஸ் வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருந்ததால், அங்கிருந்த சோபாவில் அமர்ந்தபடி காத்திருந்தார். பிறகு வீட்டுக்குள் மற்ற போட்டியாளர்கள் வந்த பிறகு கதவுகள் திறக்கப்பட்டு அனைவரும் உள்ளே சென்றனர். முதல் நாளில் 24 மணி நேர நாமினேஷன் என்ற முறையில், மகாராஜா படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்த சாச்சனா வெளியேற்றப்பட்டார்.
இதைத் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டுக்குள் இந்த வார தலைவர் யார் என்ற நாற்காலி போட்டி நடத்தப்பட்டது. இதில் தலைவியாக தர்ஷிகா வெற்றி பெற்றார். தொடர்ந்து முதல் வாரத்துக்கான நாமினேசன் பிராசஸ் நடந்தது. அதில் நடிகர் ரஞ்சித், பேட்மேன் ரவீந்தர், சௌந்தர்யா, நடிகர் அருண் பிரசாத், மற்றும் ஜாக்குலின், முத்துக்குமரன் ஆகியோர் நாமினேஷன் செய்யப்பட்டனர்.
இந்த வார இறுதியில் பார்வையாளர்கள் அளிக்கும் ஓட்டுகள் அடிப்படையில், இதில் 5 பேர் பாதுகாக்கப்பட்டு ஒருவர் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவார்.
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்த பேட்மேன் ரவீந்தருக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கன்பெக்சன் ரூமில் இருந்து அவரை நடிகர் ரஞ்சித் ஒரு புறமும், ராஜா ராணி சீரியல் நடிகர் அருண் பிரசாத் ஒருபுறமும் இருவர் மீதும் தோளில் கை போட்டபடி ரவீந்தரை கைத்தங்கலாக அழைத்து வருகின்றனர். அவருக்கு காலில் அடிபட்டுள்ளதாக தெரிகிறது. அதற்கான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
காலில் எலும்பு முறிவு அல்லது எலும்பில் விரிசல் இருந்தாலும் வீக்கம் பெரிதாக இருந்திருக்கும் என்று ரவீந்தர் அவர்கள் இருவரிடமும் கூறுகிறார். பார்த்து மெதுவா நடங்க, வெயிட் மொத்தத்தையும் எங்க மேல் போட்டுக்குங்க என்று நடிகர் ரஞ்சித் கூறுகிறார். ரவீந்தரை இருவரும் கைத்தாங்கலாக அழைத்துச் செல்லும் நிலையில், அவரால் நடக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால் அவருக்கு ஏன் இப்படி ஏற்பட்டது என்பது தெரியவில்லை. மேலும் உடல்நலம் பாதிக்கப்பட்ட ரவீந்தர், தொடர்ந்து பிக்பாஸ் வீட்டுக்குள் இருப்பாரா அல்லது உடல் நலம் கருதி அவரே வெளியேறுவாரா என்பது பார்வையாளர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
https://x.com/Chrissuccess/status/1843501676885578201





