- Advertisement -
Homeபொழுதுபோக்குசரியான வில்லங்கம் புடிச்ச ஆளா இருக்கிறாரே? பவர் ஸ்டார் சீனிவாசன் இயக்குகிற படத்தோட பேர் என்ன...

சரியான வில்லங்கம் புடிச்ச ஆளா இருக்கிறாரே? பவர் ஸ்டார் சீனிவாசன் இயக்குகிற படத்தோட பேர் என்ன தெரியுமா? இந்த விவகாரத்துல சிக்கினா, அந்த ஏழுமலையான் தான் காப்பத்தணும்!

- Advertisement -

ஒரு மனிதனுக்கு அடையாளமாக பெயர் அமைவது போல, ஒரு படத்துக்கு டைட்டில் தான் முதல் அடையாளமாக இருக்கிறது. அதன்பிறகு தான் படத்தின் இயக்குனர், ஹீரோ, தயாரிப்பாளர், இசையமைப்பாளர், ஹீரோயின் போன்றவர்கள் எல்லாம் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படுகின்றனர். அதனால் ஒரு படத்துக்கு டைட்டில் என்பது, ஒரு உருவத்தின் முகம் போல அடையாளமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

எம்ஜிஆர் சிவாஜி நடித்த காலகட்டத்தில், ஒரு படத்தின் பெயர் என்பது மிகவும் கவனமாகவும், ரசிகர்களை கவரும் விதமாகவும் அதே நேரத்தில் சமூகத்திற்கு கருத்து சொல்லும் தலைப்புகளைக் கொண்டும் உருவாக்கப்படும். கவிதை நயத்துடனும், படத்தின் பெயர்கள் அமைவது உண்டு. அதுபோல் குறிப்பிட்டு பல படங்களை சொல்ல முடியும்.

- Advertisement -

குடியிருந்த கோயில், அன்பே வா, நினைவே ஒரு சங்கீதம், பயணங்கள் முடிவதில்லை, வைதேகி காத்திருந்தா ஆண் பாவம், வருஷம் 16, பூவிழி வாசலிலே, பூவே பூச்சூடவா, தாய்க்குப் பின் தாரம், ஆண்டவன் கட்டளை, பாசமலர் என படத்தின் டைட்டிலிலேயே ஒருவித ஈர்ப்பையும் கவனத்தையும் ரசிகர்களுக்கு ஏற்படுத்தும் விதமாக அந்த காலத்தில் படங்களின் பெயர்கள் இருந்தன.

அதன் பிறகு ரஜினி, கமல் நடிக்க வந்த காலகட்டத்தில் ஹீரோயிசத்தை மையப்படுத்தும் பெயர்களை கொண்ட டைட்டில்கள் படங்களுக்கு வைக்கப்பட்டன. குறிப்பாக ரஜினி, கமல், நடிக்கும் படங்களில் அந்த படத்தில் அவர்கள் கேரக்டரின் பெயர்களே படத்துக்கும் வைக்கப்பட்டது. விக்ரம், மாவீரன், வேலைக்காரன், படிக்காதவன் என்பதை உதாரணமாக சொல்லலாம். விஜய் படங்களுக்கும் அதுவே தொடர்கிறது.

- Advertisement -

இந்நிலையில் தமிழ் சினிமாவில் அக்குபஞ்சர் வைத்தியரான சீனிவாசன் படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்தார். பின்னர் அவரே தயாரித்த லத்திகா படத்தில் நாயகனாகவும் நடித்தார். தன்னை பவர்ஸ்டார் என்று அவரே பெயர் வைத்து அழைத்துக் கொண்டார். ரசிகர்களும் அவரை அப்படியே அழைக்க ஆரம்பித்தனர். நடிகர் சந்தானம் நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார்.

அதன் பிறகு பல படங்களில் காமெடி நடிப்பில் நடித்த அசத்திய அவர், தற்போது அவர் ஒரு புதிய படத்தை இயக்கி நடித்து வருகிறார். அந்த படத்துக்கு பவர் லட்டு என பெயர் வைத்திருக்கிறார். இந்த படத்தை எல்வி கிரியேஷன்ஸ் சார்பில் டாக்டர் லோகு என்பவர் தயாரிக்கிறார். கதை திரைக்கதையை கார்த்திக் காமராஜ் எழுதியுள்ளார். இந்த படத்துக்கு பவர் லட்டு என பெயர் வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில்தான் திருப்பதி லட்டு விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி பரபரப்பாக பேசப்பட்டது. இப்போது இந்த படத்துக்கு பவர் லட்டு என்று பெயர் வைத்திருப்பது, திருப்பதி லட்டு விவகாரத்தை மையப்படுத்திய கதையாக இருக்குமா என்ற சந்தேகத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்