- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்த வாரத்தில் ஓடிடி தளங்களில் வெளியாகப் போகும் படங்கள்; லிஸ்ட் வந்தாச்சு - தீபாவளி...

இந்த வாரத்தில் ஓடிடி தளங்களில் வெளியாகப் போகும் படங்கள்; லிஸ்ட் வந்தாச்சு – தீபாவளி இப்பவே ஓடிடி தளங்களில் களை கட்ட ஆரம்பித்து விட்டதா?

- Advertisement -

சினிமா தியேட்டர்களில் தங்களது அபிமான நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது ரசிகர்கள் அந்த படங்களை பார்த்து கொண்டாடி மகிழ்கின்றனர். அதன்பிறகு சேட்டிலைட் சேனல்களில் சில மாதங்கள் கழித்தோ அல்லது சில ஆண்டுகள் கழித்தோ அந்த படங்கள் வெளியாவது வழக்கமாக இருந்தது.

ஆனால் இப்போது ஓடிடி தளங்களில் சேட்டிலைட் சேனல்களில் வருவதற்கு முன்பே ஓடிடி தளத்தில் வெளிவந்து விடுகின்றன. ஒரு புதிய படம் தியேட்டரில் ரிலீஸ் ஆன அடுத்த 4 வாரங்களில் அல்லது 8 வாரங்களில் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகின்றன. அதனால் குடும்பத்துடன் ஓடிடி தளங்களில் படம் பார்க்க பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் சினிமா தியேட்டர்களுக்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் ஒரு புகார் நீடிக்கிறது.

- Advertisement -

சினிமா தியேட்டர்களில் ரசிகர்களால் எப்படி ரிலீஸாகும் ஒரு திரைப்படம் கொண்டாடப்படுகிறதோ, அதேபோல் ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்களை கொண்டாடவும் ரசிகர்கள் கூட்டம் காத்திருக்கிறது. அந்த வகையில் இந்த வாரம் ஓடிடி தளங்களில் வெளிவர உள்ள தமிழ் படங்கள் குறித்த லிஸ்ட் தற்போது வெளியாகி உள்ளது.

நடிகர் கார்த்தியின் நடிப்பில், 96 படத்தின் இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் உருவான மெய்யழகன். இந்த படத்தில் கார்த்தியுடன் முக்கிய கேரக்டரில் அரவிந்த்சாமி நடித்திருந்தார். ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் என முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருந்தனர். மெய்யழகன் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால், இன்னும் பல தியேட்டர்களில் மெய்யழகன் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படம் வருகிற 25ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

- Advertisement -

தமிழ் சினிமாவில் தற்போது நடிப்பு, இசை, படங்களை இயக்குவது என பல துறைகளில் அசத்திக் கொண்டிருக்கும் ஹிப்ஹாப் ஆதி நடித்து, அவரே டைரக்ட் செய்துள்ள படம் கடைசி உலகப் போர். இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பு பெற்ற நிலையில் வருகிற 25ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளிவர உள்ளது.

சீனு ராமசாமி இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 20ம் தேதி வெளிவந்த படம் கோழிப்பண்ணை செல்லத்துரை. யோகி பாபு முக்கிய கேரக்டரில் நடித்த இந்த படம் வரும் 24ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. அதேபோல் நடிகை சாய் தன்ஷிகா, சந்தோஷ் பிரதாப், தேவதர்ஷினி, பொன்வண்ணன் ஆகியோர் நடித்துள்ள வெப் தொடர் வேதம். இந்த தொடர் வருகிற 25ம் தேதி ஜி 5 தளத்தில் வெளியாகிறது. ரசிகர்களன் கவனம் பெற்ற இந்த படங்கள், வெப் சீரிஸ் தீபாவளி பண்டிகை நேரத்தில் வெளியாவது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்