ரஜினியை பொறுத்தவரை அவர் நடிக்கும் படங்கள் கமர்ஷியலாக வெற்றி பெற வேண்டும் என்பதே அவரது குறிக்கோளாக இருக்கும். சமீபத்தில், லால் சலாம் பட விழாவில் பேசிய ரஜினிகாந்த், இந்த படத்தில் நடித்தால் நிச்சயம் அவார்டு கிடைக்கும் என்று என் மகள் ஐஸ்வர்யா குறிப்பிட்டுச் சொன்னார். ஆனால் இந்த படத்துக்கு அவார்டு கிடைப்பதை விட ரிவார்டு கிடைப்பது தான் முக்கியம். படம் விருது பெறுவதை விட, கமர்ஷியலாக பெரிய அளவில் வசூலிக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் கூறியிருந்தார்.
அவரைப் பொறுத்தவரை ஒரு படம் விருதுக்கான படமாக இருப்பதை விட நல்ல வசூல் மழை பொழியும் படமாக இருக்க வேண்டும் என்பதுதான் ரஜினியின் இலக்காக இருக்கிறது. எப்போதுமே பணம் விஷயத்தில், ரஜினிகாந்த் குறிக்கோளாக இருப்பார். ரஜினிகாந்த் இதுவரை சம்பாதித்த பணத்தை எல்லாம் பலவிதமான தொழிலகளில் முதலீடு செய்து அதன் மூலமும் மாதந்தோறும் பல நூறு கோடி ரூபாய் லாபம் பார்த்து வருகிறார்.
ஆனால் முன்பெல்லாம் நடிகர்கள் தாங்கள் சினிமாவில் சம்பாதித்த பணத்தை சினிமாவிலேயே முதலீடு செய்வார்கள். சிலர் லாபம் அடைவார்கள். பெரும்பாலும் பலத்த நஷ்டம் அடைவார்கள். இதற்கு நடிகர் கமல்ஹாசனை உதாரணமாக சொல்லலாம். ஆனால் ரஜினிகாந்த் தனது சொத்துகளை மிக கவனமாக பாதுகாப்பதில், அக்கறையாக இருந்து வருகிறார். ரஜினிகாந்த்க்கு அசையும் சொத்துகள், அசையாத சொத்துக்கள் என்ற வகையில் 5,000 கோடிக்கு மேல் சொத்துகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.
மூத்த மகள் ஐஸ்வர்யாவின் கணவர் தனுஷ், சினிமா நடிகராக உள்ள நிலையில் அவர் படங்களில் நடித்தால் மட்டும் போதும். படங்களை டைரக்ட் செய்வது, தயாரிப்பது போன்ற பணிகளில் ஈடுபட வேண்டாம் என்று ரஜினிகாந்த் பலமுறை அவரை வலியுறுத்தி உள்ளார். இதற்கு காரணம் பெரிய பெரிய ஜாம்பவான்களே பல கோடி ரூபாய் சொத்துக்களின் அதிபதிகளே இப்படி படம் தயாரித்து, படத்தை இயக்கி ஏகப்பட்ட நஷ்டம் அடைந்துள்ளனர்.
அதனால் தனுஷ் அதுபோன்ற நஷ்டத்தை அடையக்கூடாது என்பதற்காக நீங்கள் படத்தில் நடிக்க மட்டுமே செய்யுங்கள். டைரக்சன், தயாரிப்பு வேண்டாம் என்று ரஜினி அறிவுறுத்தி உள்ளார். ஆனால் அதை நான் கேட்கவில்லை என்று நடிகர் தனுஷ், ஒரு நேர்காணலில் அவரே ஒத்துக் கொண்டிருந்தார். இப்போதும் நடிகர் தனுஷ் படங்கள் இயக்குவதிலும் தயாரிப்பதிலும் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறார்.
மருமகன் தனுஷ், இப்படியே போனால் ஒரு கட்டத்தில் பல விதங்களில், நஷ்டம் அடைந்து நடுத்தெருவுக்கு வந்துவிடுவார். பிறகு தனது 5,000 கோடி சொத்துக்கள் இவரால் வீணாகி விடுமோ என்ற பயத்தில், நடிகர் தனுஷ் தனது மகளை விட்டு பிரிவதுதான் தனது சொத்துக்களை காப்பாற்றுவதற்கான ஒரே வழி என்று நடிகர் ரஜினிகாந்த் முடிவு செய்து, இறுதியில் தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து முடிவுக்கு ரஜினிகாந்த் சம்மதித்து விட்டார் என்ற ஒரு தகவலும் பரவி வருகிறது.





