தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிலம்பரசன். இப்போது மணிரத்னம் இயக்கத்தில் தக்லைப் படத்தில் அவர் நடித்து முடித்திருக்கிறார். அடுத்ததாக ஓ மை கடவுளே, டிராகன் ஆகிய படங்களை இயக்கிய டைரக்டர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க உள்ளார்.
இது சிம்புவின் 49 வது படமாகும். இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. நடிகர் விஜய் நடித்த தி கோட் படத்தை தயாரித்த நிறுவனம் ஏஜிஎஸ் என்பது குறிப்பிடத்தக்கது. சிம்பு நடிக்கும் அவரது 49 வது படம் குறித்த அறிவிப்பு நேற்று வெளியான நிலையில், இந்த படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார்.
ஆனால் வழக்கமாக சிம்பு நடிக்கும் படங்களுக்கு அவரது நெருங்கிய நண்பரான யுவன் சங்கர் ராஜா தான் இசையமைத்து வந்தார். இந்த முறை அவருக்கு பதிலாக அனிருத் இசையமைக்கிறார் என்பது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. சமீபகாலமாக அனிருத் இசை பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து வரவேற்பை பெற்று வருகிறது.
நடிகர் சிம்புவின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர் மஹத். இவர் பல படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக நடிகர் விஜய், மோகன்லால் நடித்த ஜில்லா படத்தில் நடிகர் விஜய்க்கு தம்பியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் மஹத் பங்கேற்று தமிழக மக்களின் கவனத்தைப் பெற்றவர். விளம்பர படங்களிலும் மஹத் நடித்திருக்கிறார்.
சமீப காலமாக நடிகர் மஹத், சிலம்பரசனின் உதவியாளராக இருந்து அவரது படங்கள் தொடர்பான விஷயங்களை கவனித்துக் கொண்டார். சிம்புவிடம் கதை சொல்ல வேண்டும் என்றால், நடிகர் மஹத்தைதான் தொடர்பு கொள்ள வேண்டும். அந்த அளவுக்கு மஹத் சிம்புவின் நிழலாக மஹத் இருந்து கால்ஷீட் மற்றும் சிம்புவின் தினசரி நடவடிக்கைகள். நிகழ்ச்சிகள் என பல விஷயங்களை கவனித்துக் கொண்டார். தற்போது நடிகர் மஹத், 2 படங்களில் நடித்திருக்கிறார். அதில் ஒரு படம் விரைவில் ரிலீஸ் ஆகிறது.
இந்நிலையில் தனது சினிமா பயணத்தை தொடர்வதற்காக, நடிகர் சிம்புவிடமிருந்து மஹத் விலகி, படங்களில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார். இதையடுத்து தன்னுடன் நீண்ட நாட்களாக இருந்து வரும் விக்னேஷ், சாய்பரத் என்ற புதிய இரண்டு நிர்வாகிகளை சிம்பு நியமித்துள்ளார். இனி அவர்கள் இருவரும் சிம்புவின் கால்ஷீட் மற்றும் தினசரி நிகழ்ச்சிகள் குறித்து கவனித்துக் கொள்ள உள்ளனர். சிம்பு மஹத் நட்பில் எப்போதும் போல உறவு நீடித்தாலும், சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே மஹத், சிம்புவிடமிருந்து தற்காலிகமாக விலகி இருப்பதாக தெரியவந்துள்ளது.





