நடிகர் ரஜினிகாந்த் நடித்த படங்களில் மிகப்பெரிய வெற்றிப் படம் மனிதன். கடந்த 1990களில் வெளியான இந்த படத்தில் ரஜினியுடன் ரூபிணி ரகுவரன் வினு சக்வர்த்தி சோ மாதுரி ஜெய் கணேஷ் ஸ்ரீவித்யா செந்தில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தில் நடிகர் வினு சக்ரவர்த்தி அரசியல்வாதியாக நடித்திருப்பார்.
அவர் தேர்தலில் போட்டியிடும் போது நடிகர் ரஜினிகாந்த் தேர்தலுக்கு முன்பே அந்த தொகுதியில் தேவையான அடிப்படை வசதிகளை வேட்பாளர் வினு சக்ரவர்த்தியை செய்து தருமாறு சொல்வார். குறிப்பாக ரோடு வசதி சாக்கடை கால்வாய் வசதி மின்விளக்கு கிணறு என பல அடிப்படை வசதிகளை செய்து தந்தால் மக்கள் ஓட்டு போடுவார்கள் என்று பேசி அவரை சம்மதிக்க வைப்பார்.அதே பாணியில் இப்போது இயக்குனர் ராஜகுமாரனும் தவெக கட்சித் தலைவர் நடிகர் விஜய்க்கு வேண்டுகோள் வைத்து பேசியிருக்கிறார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் ராஜகுமாரன் கூறியதாவது, அனைவருக்கும் வீடு அனைவருக்கும் பைக் என்ற விஜயின் அறிவிப்பு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் 30 ஆண்டுகளாக உங்களுக்கு லைட் போட்டு ஒயர் பிடிச்சு குடை பிடிச்சு மேக்கப் போட்டு சோறு போட்டு பத்து பாத்திரங்கள் கழுவி உங்களை காருக்குள்ள உட்கார வெச்சு குளுகுளு ரூம்ல உட்கார வெச்சு 30 வருஷமா பெப்ஸி தொழிலாளர்கள் என்று ஒன்றரை லட்சம் குடும்பங்களுக்கு மேலான ஆட்கள் இருக்கின்றனர்.
இன்னும் நிறைய டைம் இருக்கு. ஏப்ரலுக்கு மேல தான் எலக்சன் வரப் போகுது. அதுக்குள்ள இந்த ஒன்றரை லட்சம் பேருக்கு நீங்க வீடு கட்டி கொடுத்துடுங்க. ஆளுக்கு ஒரு வீடு கொடுத்துடுங்க. பைக் கொடுத்தாலும் ஒன்றரை லட்சம் பேருக்கு ஒரு பைக்குன்னு கொடுத்து முடிச்சிடுங்க. அதுக்கு அப்புறம் இந்த தேர்தலில் வந்து நீங்க மக்களுக்கு கொடுங்க.
கடந்த 30 வருஷமா உங்களை இப்படி கிரீடம் மாதிரி தூக்கிக்கொண்டு வெச்ச இந்த தொழிலாளர்களுக்கு ஆளுக்கு ஒரு வீடு கொடுத்தீங்கன்னா நீங்கள் பெருமை மிகுந்த மனிதர். அந்த ஸ்டேட்மென்டை பாராட்டலாம். எங்கேயோ இருக்கிற விவேக் ஓபராய் இங்க வந்து வீடு கட்டி கொடுக்கிறார். கொடுத்தாரா இல்லையா? சுனாமி டைமில் எவ்வளவு வீடுகள் கட்டிக் கொடுத்தார். அதனால் விஜயும் செய்ய முடியும்.
ஆனால் அந்த சிந்தனை உங்ககிட்ட இல்லை. உங்க சிந்தனை எல்லாம் வேறு வகையான ஏற்றத்தில் போகணும் ஏறி போகணும் என்று இருக்கிறது. செய்ய வேண்டும் என்கிற எண்ணம்தான் வேண்டும். சூர்யா எவ்வளவோ செய்கிறார். எவ்வளவு பேரை அவர் படிக்க வைக்கிறார்? அவர் எங்காவது போய் இதை சொல்லிக்கிட்டு இருக்கிறாரா? அதற்காக திட்டம் தீட்டி அறிக்கை கொடுத்துட்டு இருக்கிறாரா? செய்வது என்பது வேறு. பேசுவது சொல்வது அதற்காக வாக்குறுதி கொடுப்பது என்பது வேறு என்று ராஜகுமாரன் பேசியிருக்கிறார்.





