- Advertisement -
Homeபொழுதுபோக்குபிக்பாஸ் வீட்டுக்குள் விஜய் சேதுபதி மகன் சூர்யா, அப்பாவை போலவே மகனும் கலக்கப் போகிறாரா? பார்வையாளர்களுக்கு...

பிக்பாஸ் வீட்டுக்குள் விஜய் சேதுபதி மகன் சூர்யா, அப்பாவை போலவே மகனும் கலக்கப் போகிறாரா? பார்வையாளர்களுக்கு இருக்குது டிவிஸ்ட்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. அவர் நடித்த 50வது படம் மகாராஜா படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து, அடுத்து விஜய் சேதுபதி இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் தற்போது நடித்து வருகிறார். புதுக்கோட்டையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்த படத்தில் பரோட்டா மாஸ்டர் கேரக்டரில் விஜய் சேதுபதி நடிக்கிறார். அவருடன் கதாநாயகியாக, சமீபத்தில் சிறந்த நடிகை தேசிய விருது பெற்ற நித்யா மேனன் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் விடுதலை 2 படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்து தற்போது டப்பிங் பணிகள் துவங்கியுள்ளது.

- Advertisement -

விடுதலை 2 படம் தீபாவளிக்கு வருமா அல்லது கிறிஸ்துமஸ், பொங்கலுக்கு வருமா என்பதில் சந்தேகம் நீடிக்கிறது. விடுதலை முதல் பாகம் வெளிவந்து 2 ஆண்டுகளை நெருங்கும் நிலையில். விடுதலை 2 படம் விரைவில் வெளியாக வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர். அதே வேளையில் விடுதலை 3 பாகம் படமும் உருவாகி இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் விஜய் சேதுபதி தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பங்கேற்று வருகிறார். ஆரம்பத்தில் கமல்ஹாசன் அளவுக்கு விஜய் சேதுபதி நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்குவாரா என்று பார்வையாளர்கள் மத்தியில் சந்தேகம் ஏற்பட்டது. நடிப்பில் மட்டுமல்ல, பேச்சாற்றலிலும் தன்னால் சாதிக்க முடியும் என்பதை நிரூபிக்கின்ற வகையில் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக நடத்தி வருகிறார் என்று ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்று இருக்கிறார்.

- Advertisement -

குறிப்பாக கமல்ஹாசன் பேச்சில் இருந்த தற்பெருமை விஜய் சேதுபதியிடம் சுத்தமாக இல்லை.அவர் மிகவும் எதார்த்தமாக பேசுகிறார். நடிகர் என்ற நிலையில் இல்லாமல், மிகவும் சாதாரண மனிதர் போல் அவர் போட்டியாளர்களிடம் பேசுவதை பலரும் பாராட்ட தொடங்கி இருக்கின்றனர். இந்த சூழ்நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆனால் அவர் போட்டியாளராக செல்லவில்லை. ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கிய பீனிக்ஸ் என்ற படத்தில் ஹீரோவாக சூர்யா நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடந்து வருகிறது. வருகிற நவம்பர் 14ம் தேதி பீனிக்ஸ் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது விஜய் சேதுபதி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அதனால் அவரது மகன் சூர்யா பிக்பாஸ் வீட்டுக்குள் சென்று, அவர் ஹீரோவாக அறிமுகமாகும் பீனிக்ஸ் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியை தந்தையுடன் இணைந்து நடத்தப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்