தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் டாப் நடிகையாக கலக்கி வரும் நயன்தாரா, பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்க உள்ள திரைப்படம் “ஜவான்”. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில் சமீபத்தில் இத்திரைப்படத்தின் அட்டகாசமான டீசர் ஒன்று வெளியானது. இத்திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

தமிழில் “ராஜா ராணி”, “தெறி”, “மெர்சல்”, “பிகில்” ஆகிய வெற்றி திரைப்படங்களை கொடுத்த அட்லீ, பாலிவுட்டில் தனது தடத்தை “ஜவான்” திரைப்படத்தின் மூலம் பதிக்க உள்ளார். அட்லீ கமெர்சியலாக படம் இயக்குவதில் வல்லவர். அதே போல் பாலிவுட்டிலும் தனது கமெர்சியல் ஃபார்முலாவை புகுத்தி தனது வெற்றியை நிரூபித்து காட்டுவார் என ரசிகர்கள் காத்துக்கிடக்கின்றனர்.
“ஜவான்” திரைப்படத்தின் மூலம் நயன்தாராவும் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளதால் தமிழ் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக இத்திரைப்படம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இத்திரைப்படத்திற்காக விக்னேஷ் சிவன் போட்ட கண்டிஷன் குறித்து பிரபல மூத்த பத்திரிக்கையாளரான அந்தணன், தனது வீடியோ ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

விக்னேஷ் சிவன் நயன்தாராவை காதலித்துக்கொண்டிருந்த சமயத்தில்தான் அட்லீ “ஜவான்” திரைப்படத்தின் ஆஃபரை கொண்டு வந்தாராம். நயன்தாராவும் பாலிவுட்டிற்கு சென்று முயன்று பார்த்துவிடலாம் என்று முடிவெடுத்துவிட்டாராம். நயன்தாரா பாலிவுட்டிற்குச் சென்று அடுத்தடுத்த படங்களில் பிசியாகிவிட்டால் திருமணம் செய்ய பல ஆண்டுகள் தள்ளிப்போய்விடுமே என்று நினைத்தாராம் விக்னேஷ் சிவன்.
ஆதலால், “என்னை திருமணம் செய்துகொண்டு, எங்கு வேண்டுமானாலும் போ” என்று விக்னேஷ் சிவன் கண்டிஷன் போட்டுவிட்டாராம். அதனை தொடர்ந்துதான் இருவரும் திருமணம் செய்துகொண்டார்களாம். இவ்வாறு ஒரு தகவலை அந்தணன் பகிர்ந்துகொண்டுள்ளார்.





