- Advertisement -
Homeபொழுதுபோக்குதனுஷூம் செல்வராகவனும் என்னை பாடாய்ப்படுத்திட்டாங்க, அண்ணன் தம்பி ரெண்டு பேருகிட்டேயும் வசமா நான் சிக்கிட்டேன் -...

தனுஷூம் செல்வராகவனும் என்னை பாடாய்ப்படுத்திட்டாங்க, அண்ணன் தம்பி ரெண்டு பேருகிட்டேயும் வசமா நான் சிக்கிட்டேன் – ஓப்பன் ஸ்டேட்மென்ட் கொடுத்த நடிகை சாய்பல்லவி!

- Advertisement -

தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனம் கவர்ந்த முன்னணி நாயகியாக இருப்பவர் சாய் பல்லவி. வரும் தீபாவளிக்கு சிவகார்த்திகேயனுடன் சாய்பல்லவி ஜோடியாக நடித்த அமரன் படம் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் பிரமோ நிகழ்ச்சிகளில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்ட படக்குழுவினர் தொடர்ந்து பங்கேற்று வருகின்றனர்.

தென்னிந்திய சினிமாவில் முக்கிய நாயகிகளின் ஒருவராக சாய் பல்லவி வலம் வருகிறார். இவர் டாக்டருக்கு படித்த நிலையில், சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையால் நடிப்புத் துறைக்கு வந்து விட்டார். இவரது வசீகரமான அழகும், நடிப்பும் தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

சமீபத்தில் அமரன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் மணிரத்னம் சாய்பல்லவியின் ரசிகன் என்று வெளிப்படையாக கூறியது குறிப்பிடத்தக்கது. விரைவில் நாம் இருவரும் இணைந்து பணி செய்வோம் என்று மணிரத்னம் கூறியதால், விரைவில் மணிரத்னம் இயக்கும் படத்தில் சாய் பல்லவி நடிப்பார் என்பதும் உறுதியாகிவிட்டது.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகை சாய் பல்லவி பல விஷயங்களை வெளிப்படையாக பேசியிருக்கிறார். அப்போது அவர் கூறியதாவது, ஒரு படத்தில் நடிக்க கொடுத்த கால்ஷீட் தாண்டி சூட்டிங் நடந்தால் நான் கூடுதல் சம்பளம் கேட்பதாக சில பத்திரிகைகளில் எழுதியதை பார்த்து நான் மிகவும் அதிர்ச்சியாகிவிட்டேன்.

காசுக்காக தான் நடிக்க வேண்டும் என்றால் 100 படத்தை ஒப்பந்தம் செய்து கொண்டு பணத்தை வாங்கி போட்டுக்கொண்டு, அதன்பின் நான் நடிக்காமல் சென்று இருப்பேன். நடிப்பது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அதில் கிடைக்கும் அங்கீகாரமும், நம்ம வீட்டுப் பெண்ணின் படம் ரிலீஸ் ஆகிறது என்று ரசிகர்கள் சொல்லும் அன்பும்தான் தொடர்ந்து நல்ல படங்களை பண்ண வேண்டும் என்ற முனைப்பை எனக்கு கொடுத்திருக்கிறது.

இயக்குனர் செல்வராகவன் இயக்கிய என்ஜிகே படத்திலும், தனுஷூடன் மாரி 2 படத்திலும் நான் நடித்தேன். அப்போது தனுஷ் ஏதாவது டார்ச்சர் பண்ணினால், என்கிட்ட சொல்லு, நான் கேட்கிறேன் என்று செல்வராகவன் சார் சொல்வார். அதேபோல், செல்வா சார் ரொம்ப டார்ச்சர் செய்தால் என்னிடம் சொல்லுங்கள். என்று தனுஷ் என்னிடம் சொல்வார். ஆனால் அண்ணன், தம்பி இருவரும் அவங்களுக்கு கஷ்டமான சீன் கொடுக்கணும், கஷ்டமான வசனம் கொடுக்கணும்ன்னு போட்டு என்னை பாடாய்ப்படுத்தி எடுத்துட்டாங்க. ஆனால் இருவரும் பக்கா புரபஷனலிஸ்ட் என்று சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.

சற்று முன்