- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன் நிஜப் பேரு இது இல்லே, வேற பேரு… அப்போ தமிழ்நாட்டு முதலமைச்சரா இருந்த அவர்தான்...

என் நிஜப் பேரு இது இல்லே, வேற பேரு… அப்போ தமிழ்நாட்டு முதலமைச்சரா இருந்த அவர்தான் எனக்கு அந்த பேரை வெச்சாரு – பிக்பாஸ் வீட்டில் நடிகர் ரஞ்சித் பகிர்ந்த ருசிகர தகவல்!

- Advertisement -

ஒரு மனிதனின் முக்கிய அடையாளமாக இருப்பது அவர்களது பெயர்தான். பெரும்பாலும் பெற்றோர்தான் தங்களது பிள்ளைகளுக்கு பெயர் வைப்பார்கள். ஆனால் ஒரு சிலர் தங்களது அபிமான மனிதர்கள், தலைவர்கள் தங்கள் பிள்ளைக்கு பெயர் வைக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். குறிப்பாக அரசியல் ஆர்வம் கொண்டவர்களுக்கு, தங்கது அபிமான தலைவர்தான் தங்களது பிள்ளைக்கு பெயர் சூட்ட வேண்டும் என்றும் விரும்புவார்கள்.

அதனால் பெரிய அரசியல் தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி, ஸ்டாலின் போன்றவர்கள் தங்கள் பகுதிக்கு தேர்தல் பிரசாரத்துக்கு வரும்போது, தங்களது குழந்தைகளை வாகனத்தில் பேசிக்கொண்டு இருக்கும் அவர்களது கையில் கொடுத்து பெயர் வைக்குமாறு சொல்வார்கள். அப்படி பலருக்கு அப்படி தலைவர்கள் பெயர் வைத்திருக்கின்றனர்.

- Advertisement -

இப்போதும் ஸ்டாலின், சீமான், உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி போன்ற அரசியல் தலைவர்கள் இது போல் தேர்தல் பிரசாரத்தின் போது தங்களது தொண்டர்களின் பிள்ளைகளுக்கு பெயர் வைத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி ஒரு ருசிகரமான சம்பவத்தைதான் பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராக உள்ள நடிகர் ரஞ்சித்தும் தற்போது கூறியிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் நடிகர் ரஞ்சித். இவர் ஹீரோவாக, வில்லனாக, குணச்சித்திர நடிகராக பல படங்களில் நடித்திருக்கிறார். பீஷ்மர், கவுண்டம்பாளையம் போன்ற படங்களை தயாரித்தும் இருக்கிறார். நடிகர் ரஞ்சித் தற்போது விஜய் டிவியில் நடந்து வரும் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்து கொண்டிருக்கிறார்.

- Advertisement -

வீட்டுக்குள் இருக்கும் நடிகர் ரஞ்சித் சக போட்டியாளரான சுனிதாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது அவர் உங்கள் பெயர் நிஜப் பெயரே ரஞ்சித் தானா என்று கேட்கிறார். அப்போது நடிகர் ரஞ்சித், என்னுடைய உண்மையான பெயர் ரஞ்சித் அல்ல… செந்தில்குமார். இது எம்ஜிஆர் வெச்ச பேரு. இந்த பெயரை எனக்கு வைத்தது நடிகர் எம் ஜி ஆர் தான் என்கிறார்.

எம்ஜிஆர் தமிழ்நாட்டு முதலமைச்சராக இருந்தபோது, கிராமங்களுக்கு எல்லாம் வருவார். அப்படி எங்க ஊருக்கு வந்தபோது, குழந்தையாக இருந்த எனக்கு எம்.ஜி.ஆர்தான் செந்தில்குமார் என பெயர் வைத்திருக்கிறார். அதுதான் என் பெயராக இருந்தது. பள்ளியில் படிக்கும் போது ஸ்கூல் ரெக்கார்டில் எல்லாம் என்னுடைய பெயர் செந்தில்குமார்தான் ரிஜிஸ்டர் ஆகி இருக்கிறது. நான் சினிமாவில் நடிக்க வந்தபோது என்னுடைய பெயரை ரஞ்சித் என்று டைரக்டர்தான் மாற்றினார் என்று நடிகர் ரஞ்சித் கூறியிருக்கிறார். இது தற்போது வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்