- Advertisement -
Homeபொழுதுபோக்குஅமரன் படத்தில் இந்து ரெபேகா வர்கீஸ் கேரக்டரில் அசத்திய சாய் பல்லவி, அதற்காக மாணவருக்கு குவியும்...

அமரன் படத்தில் இந்து ரெபேகா வர்கீஸ் கேரக்டரில் அசத்திய சாய் பல்லவி, அதற்காக மாணவருக்கு குவியும் வாழ்த்துகளும், பாராட்டுகளும் – என்ன கொடும சார் இது?

- Advertisement -

தீபாவளிக்கு சிவகார்த்திகேயன் சாய் பல்லவி நடிப்பில் அமரன், ஜெயம் ரவி, பூமிகா நடிப்பில் பிரதர், கவின் நடிப்பில் பிளடி பெக்கர் மற்றும் மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடித்த தெலுங்கு படம் லக்கி பாஸ்கர் ஆகிய 4 படங்கள் ரிலீஸாகின. இதில் அமரன் மற்றும் லக்கி பாஸ்கர் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்து அந்த படங்கள் வெற்றி பெற்றுள்ளன.

குறிப்பாக அமரன் படத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அமரன் படம் ரிலீஸான 3 நாட்களில், உலகளவில் 104 கோடி ரூபாய் வசூலை கடந்தது, நேற்று வரை 7 நாட்களில் மொத்தம் 180 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளது. அதே போல் தமிழ்நாட்டில் இந்த படம் ஒரு வாரத்தில் 87.9 கோடி ரூபாயை கடந்து ரூ. 100 கோடி இலக்கை நோக்கி வேகமாக சென்றுக்கொண்டு இருக்கிறது.

- Advertisement -

தமிழகத்தை சேர்ந்த மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜன், அவரது மனைவி இந்து ரெபேகா வர்கீஸ் ஆகியோரை மையப்படுத்தி தான் இந்த படம் உருவாகியுள்ளது. ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் முகுந்த் கேரக்டரில் சிவகார்த்திகேயனும், இந்து ரேபேகா வர்கீஸ் கேரக்டரில் சாய் பல்லவியும் நடித்துள்ளனர். இந்த படத்தை ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி டைரக்ட் செய்திருக்கிறார்.

நடிகர் கமல்ஹாசனின் நேரடி பார்வையில் அவரது தயாரிப்பில் உருவான இந்த படத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் தங்கம் தென்னரசு, பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக மகளிரணி தலைவி வானதி சீனிவாசன், நடிகர்கள் ரஜினிகாந்த், சிவக்குமார், சூர்யா, நடிகை ஜோதிகா, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பலரும் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

இந்நிலையில் அமரன் படத்தில் சிவகார்த்திகேயனை போலவே, நடிகை சாய்பல்லவி நடிப்பும் பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருக்கிறது. கிளைமாக்ஸ் காட்சியில் அவரது நடிப்பை பலரும் சிலாகித்து பாராட்டி வருகின்றனர். ஆனால் அவருக்கு கிடைக்க வேண்டிய பாராட்டும் வாழ்த்துகளும் சில தினங்களாக மாணவர் ஒருவருக்கு சென்று சேருகிறது.

அமரன் படத்தில் ஒரு காட்சியில், சாய் பல்லவி தனது மொபைல் நம்பரை சிவகார்த்திகேயனுக்கு தருவது போல் காட்சி வருகிறது. அந்த எண் உண்மையில சாய் பல்லவி எண் அல்ல. அதே நேரத்தில் சென்னையை சேர்ந்த ஒரு மாணவரின் மொபைல் எண்ணாக அது யதேச்சையாக அமைந்துவிட்டது. அதுதான் நடிகை சாய்பல்லவியின் மொபைல் எண் என ரசிகர்கள் பலரும் அந்த மாணவருக்கு எஸ்எம்எஸ், வாட்சப் வாயிலாக வாழ்த்துகளை, பாராட்டுகளை குவித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அந்த மாணவர் மன உளைச்சலில் இருப்பதாக கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்