- Advertisement -
Homeபொழுதுபோக்குசிவகார்த்திகேயன் சாய்பல்லவி நடித்த அமரன் படம் திரையிட்ட தியேட்டர்கள் முன் குவிக்கப்பட்ட போலீசார் - ...

சிவகார்த்திகேயன் சாய்பல்லவி நடித்த அமரன் படம் திரையிட்ட தியேட்டர்கள் முன் குவிக்கப்பட்ட போலீசார் – என்னாச்சு என்று பதறிப் போன ரசிகர்கள்!

- Advertisement -

கடந்த தீபாவளியன்று திரைக்கு வந்த படம் அமரன். தமிழகத்தைச் சேர்ந்த மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படத்தை நடிகர் கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரித்திருந்தார்.

கௌதம் கார்த்திக் நடித்த ரங்கூன் படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, அமரன் படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தில் முகுந்த் கதாபாத்திரத்தில் நடிகர் சிவகார்த்திகேயனும், முகுந்த் மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸ் கதாபாத்திரத்தில் சாய்பல்லவியும் நடித்திருந்தனர்.

- Advertisement -

கடந்த 31ம் தேதி தீபாவளி பண்டிகை நாளில் வெளியான அமரன் படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று, வசூலை குவித்து வருகிறது. தமிழகத்தில் 7 நாட்களில் மொத்தம் 87.2 கோடி ரூபாயும், உலக அளவில் ஒரு வாரத்தில் 180 கோடி ரூபாயும் அமரன் படம் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து தமிழகம் முழுவதும் அமரன் படத்துக்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு தந்து கொண்டாடி வருகின்றனர். அதே நேரத்தில் சமீபத்தில் முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தின் உண்மையான அடையாளம் திட்டமிட்டு மறைக்கப்பட்டதாக சிலர் சர்ச்யை கிளப்பினர். இதற்கு படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி விளக்கம் அளித்த நிலையில், விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

- Advertisement -

இந்நிலையில் தற்போது மீண்டும் அமரன் படத்துக்கு எதிரான சர்ச்சை கிளம்பி உள்ளது. இஸ்லாமிய மக்களை தீவிரவாதியாக சித்தரிக்கும் விதமாக அமரன் படத்தில் காட்சிகள் வருவதாக கூறி, முஸ்லிம்கள் மீது வெறுப்பை விதைத்து நல்லிணக்கத்தை கெடுக்கும் அமரன் படத்தை தடை செய்ய வேண்டும் என இஸ்லாமிய அமைப்புகள் வலியுறுத்தி உள்ளது.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தை நேற்று முற்றுகையிட்டு எஸ்டிபிஐ கட்சியினர் போராட்டம் நடத்தினர். அவர்களை தேனாம்பேட்டை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் சென்னையில் அமரன் படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்த உள்ளதாக தகவல் பரவியது. இதையடுத்து அமரன் படம் ரிலீஸாகியுள்ள தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்